அரசினர் கலைக்கல்லூரி, சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரசினர் கலைக்கல்லூரி, சேலம்
அரசு கலைக் கல்லூரி, சேலம்.jpg
குறிக்கோளுரை அறிவு ஆற்றல் இனிமை
வகை அரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம் 1857 (ஆங்கிலேய மேல்நிலைப்பள்ளியாக)
சார்பு பெரியார் பல்கலைக்கழகம்
அமைவிடம் சேலம்,
சேலம் மாவட்டம்
, தமிழ்நாடு,  இந்தியா
இணையத்தளம் http://www.gacsalem7.co.in/

அரசினர் கலைக்கல்லூரி, சேலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அனுமதியுடன் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது.[2] ஆர். தனலட்சுமி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[3]

வரலாறு[தொகு]

         அரசினர் கலைக்கல்லூரி, சேலம் (தன்னாட்சி) தமிழ்நாடு ல் உள்ள மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இது 1857ஆம் ஆண்டில் ஆங்கிலேய மேல்நிலைப்பள்ளியாக அலெக்ஸாண்டர் ஜான் அர்பத்னாட் Alexander John Arbuthnot தொடங்கப்பட்டது.  அதே ஆண்டில் மாவட்ட பள்ளியாக மாற்றப்பட்டது.1879 இல் சென்னைப் பல்கலைக்கழகம் உடன் இணைந்த இரண்டாம் நிலைக் கல்லூரியாக  மாற்றப்பட்டது. பிறகு படிப்படியாக வளர்ச்சியுற்று 1944 இல் முதல் நிலைக் கல்லூரியாக மாற்றப்பட்டது. 2000 இல் இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தர நிர்ணயச் சான்று அவை வழங்கும் குழுவினரால் மூன்று நட்சத்திரத் தொகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2006 இல்  மறு மதிப்பீடு செய்யப்பட்டு அதே தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை NAAC வழங்கும் குழுவினரால் 'B++' தகுதி பெற்றது.  2007 இல் தன்னாட்சி தகுதிப் பெற்று இக்கல்லூரி சிறப்பாக இயங்கி  வருகிறது.

விடுதி

அமைவிடம்[தொகு]

  சேலம் மாவட்டத்தின் மையப் பகுதியில் செர்ரி ரோட்டில் அமைந்துள்ளது.

சுழற்சி வகுப்பு முறை[தொகு]

2007-2008 ம் கல்வியான்டிலிருந்து இக்கல்லூரியில் பட்டப் படிப்பு பாடங்கலளுக்கு சுழற்சி வகுப்பு முறை பின்பற்றப்படுகிறது. முதல் சுழற்சி வகுப்புகள் 9.00 மணி முதல் 1.25 மணி வரை நடைபெறுகின்றன. இரண்டாம் சுழற்சி வகுப்புகள் 9.00 மணி முதல் 1.25 மணி வரை நடைபெறுகின்றன. [[| வகுப்பறை

இளநிலைப் படிப்புகள்[தொகு]

நூற்றாண்டு வளைவு

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

மேலும் பல்வேறு துறைகளில் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்