அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி
குறிக்கோளுரையாதும் ஊரே யாவரும் கேளிர்
வகைஅரசினர் ஆடவர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1964
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
முதல்வர்பி. இரவிக்குமார்
அமைவிடம்கிருட்டிணகிரி, தமிழ்நாடு,  இந்தியா
இணையத்தளம்gacmenkrishnagiri.org

அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரியில் செயற்பட்டுவரும் ஆண்களுக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) B++ தரத்துடன் செயற்பட்டு வருகிறது. பேராசிரியர் பி. இரவிக்குமார் இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.

கல்லூரி வரலாறு[தொகு]

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி 1964-ம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய இப்பகுதியில், உயர்கல்வி பயில ஒரு கல்லூரி தொடங்க வேண்டுமென்ற ஆர்வமும், அதற்காக பொதுமக்கள் வழங்கிய நன்கொடையும், தமிழக அரசு இக்கலைக் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்தன. 15.10.1964-ல் மாண்புமிகு முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் அவர்களால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.

1982-83 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி ஆய்வு நிறுவனமாக சென்னைப் பல்கலைக் கழகத்தினரால் அறிந்தேற்பு செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்