அரசம் பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசம் பழம் ஒரு அத்தி பழ வகையாகும்.[1] சித்த மருத்துவதில் இவை ஆண்மை மற்றும் விந்து அணு உற்பத்தி செய்யும் மருந்துகளில் பயன்படுகிறது.

ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் அரசம் பழத்தை உலர்த்தி இடித்து அரிசிமாவு வெல்லம் கலந்து புட்டு செய்து அய்யனார் மற்றும் கருப்ப சுவாமிகளுக்கு நிவேததியம் செய்ய "கிழவிக்கும் கிழவினுக்கும் குழந்தை கிட்டும்" என்பது கிராமத்து சொல்லாடை.

அய்யனார் ஒரு சைவ பிரியர் மேலும் அத்தி அரச ஆழம் பழ விரும்பி, ஆகவே அத்தி ஆழம் மற்றும் அரசம் பழம் பழுத்து தரையில்விழுந்த கனிகளை 48 நாட்கள் சேகரம் செய்து. பூமிக்கு அடியில் புதைத்து பழரசம் செய்து அதை படையாலாக பரிவார தேவதைகளுக்கு படைப்பார். இது புனிதமானது, ரத்த கொதிப்பை நீக்கவல்ல மருந்து. அதில் இருந்து வரும் சாராய வாசனையாலும், பழ ரசம் செய்யும் கலை மறந்து போய்விட்டதாலும் நாம் இன்று வேறு வழி இல்லாமல் புனிதம் இல்லா மதி மயக்கும் சாராயத்தை கடவுளுக்கு படைக்கிறோம். அதே போல கருப்பசுவாமிக்கு பயன்படும் சுருட்டு அரச இலையால் ஆனது ஆனால் இன்று மதி மயக்கும் புகை இலையை நாம் படைக்கிறோம்.

சாமை அரிசி அரசம்பழரசம் சேர்த்து செய்யப்படும் அடிசில் பரிவார தேவதைகளுக்கு நிவேததியம் செய்து ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கொடுப்பதாக கிராம பெரியவர்கள் கூறுவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆ. இரா கண்ணப்பர், தொகுப்பாசிரியர் (1966). நம் நாட்டு மூலிகைகள் 3 பாகம். மூலிகை மணி. பக். 51. https://books.google.co.in/books?id=X-AjAQAAMAAJ&dq=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D. "அரசம் பழம் அத்திப்பழ இனத்தைச் சார்ந்தது" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசம்_பழம்&oldid=3655256" இருந்து மீள்விக்கப்பட்டது