அரங்கம்பாளையம்
அரங்கம்பாளையம்
Rangampalayam அரங்கம்பாளையம் | |
---|---|
ஆள்கூறுகள்: 11°18′38″N 77°42′23″E / 11.310500°N 77.706500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
ஏற்றம் | 211 m (692 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 638009[1] |
தொலைபேசி குறியீடு | +91424xxxxxxx |
வாகனப் பதிவு | TN-56 yy xxxx |
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, காசிபாளையம், சோலார், மூலப்பட்டறை, பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம், வீரப்பம்பாளையம் நஞ்சனாபுரம் மற்றும் திண்டல் |
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | கிருஷ்ணன் உண்ணி |
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
இணையதளம் | https://erode.nic.in |
அரங்கம்பாளையம் (ஆங்கில மொழி: Rangampalayam) அல்லது பேச்சு வழக்கில் 'ரங்கம்பாளையம்' என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 211 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அரங்கம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°18′38″N 77°42′23″E / 11.310500°N 77.706500°E ஆகும். ஈரோடு, காசிபாளையம், சோலார், மூலப்பட்டறை, பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம் மற்றும் திண்டல் ஆகியவை அரங்கம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
அரங்கம்பாளையத்தில், கொங்கு கல்வி நிலையம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.[4][5] மேலும்,ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரங்கம்பாளையத்தில் அமையப் பெற்றுள்ளது.[6]
ஈரோடு வெளிவட்டச் சாலையின் நீட்டிப்பு, அரங்கம்பாளையம் வழியாகச் செல்கிறது.[7] அரங்கம்பாளையத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில், ஈரோடு மாவட்டப் பதிவுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RANGAMPALAYAM Pin Code - 638009, Erode All Post Office Areas PIN Codes, Search ERODE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ Gupta, Ed K. R. (2001). Directory of Libraries in India (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-985-4.
- ↑ Madras (India : State) State Electricity Board (1970). Administration Report (in ஆங்கிலம்).
- ↑ "கொங்கு கல்வி நிலைய ஆண்டு விழா - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-17. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ "Kongu National School selected for state hockey tourney". Afternoonnews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ AJKM Solutions. "Contact Erode Arts and Science College, Erode Tamilnadu". Erode Arts and Science College (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ Saravanan, S. P. (2020-09-26). "Third phase of outer ring road project begins in Erode". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ "Six new buildings commissioned to house registration offices". The Hindu (in Indian English). 2015-07-27. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.