அரகோனைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரகோனைட் (Aragonite)

அரகோனைட் என்பது கால்சியம் கார்பொனேட் (calcium carbonate), CaCO3 என்னும் வேதிப்பொருளின் பல்லுருக்களில் பொதுவாகக் காணப்படும் இரண்டு வகைகளில் ஒன்றாகும். மற்ற பொதுவான வடிவம் கால்சைட் (calcite) என்னும் கனிமம்.அரகோனைட்டின் படிக வடிவம் கால்சைட்டின் படிக வடிவத்தில் இருந்து வேறுபட்டது. அரகோனைட் பருமச்செவ்வக வடிவில் இருக்கும். 470 °C வெப்பநிலையில் அரகோனைட்டானது கால்சைட்டாக மாறும். அரகோனைட் குச்சிகுச்சியான வடிவிலோ நார்போன்ற வடிவிலோ இருக்கலாம். அல்லது ""இரும்புப்பூ" (flos-ferri) என்று அழைக்கப்படும் கிளைக்கும் ஸ்ட்டால்க்டைட் (stalactite) என்னும் வடிவிலும் காணப்படுகின்றது. கார்த்தினியத்தில் உள்ள இரும்புச் சுரங்கங்களில் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது.எசுப்பானியத்தில் (ஸ்பெயினில்) குவாடலாஃகரா (Guadalajara) மாநிலத்தில் உள்ள மொலினா டி அரகோன் (Molina de Aragón ) என்னும் இடத்தில் இருந்து கிடைப்பதால், அரகோனைட் என்று பெயர் பெற்றது. சுலோவாக்கியா நாட்டில் ஓச்டின்சக்கா அரகோனைட் குகை (Ochtinská Aragonite Cave) உள்ளது. பகாமா நாட்டில் கடலடியில் ஓலைட் அரகோனைட் படிவுகள் நிறைய உள்ளன.

அரகோனைட் படிகங்கள் (~ 4 செ.மீ அளவுடையன)

அரகோனைட் இயல்பாக கிளிஞ்சல் உயிரிகள் (மெல்லுடலிகள்) , முத்துச்சிப்பி போன்ற வற்றில் புறக்கூட்டில் உருவாகின்றன. இவை உயிர்வேதியல் வினைகளால் உருவாகுவதால் இதன் வடிவங்கள் உயிர்கரிமமல்லாத வேதியியல் அரகோனைட் வடிவில் இருந்து மாறுபட்டன. சில மெல்லுடலிகளில் முழு சிப்பியுமே அரகோனைட்டாக இருக்கும், சிலவற்றில் அரகோனைட், கால்சைட்டாகிய இரண்டு கனிமங்களும் இருக்கும்.

அரகோனைட் வெப்பவியக்கவியலின் படி சீர்தரமான வெப்ப அழுத்தநிலைகளில் நிலைபெறாத வேதிப்பொருள் வடிவம். இது பத்து முதல் நூறு மில்லியன் ஆண்டுகள் கணக்களவில் (107 to 108 ) கால்சைட்டாக மாறும்.

ஆர்கோனைட்டின் படிக வடிவம். ஆக்ஸிஜன் O சிவப்பு நிறத்தில் உள்ளது. கால்சியம் Ca நீல நிறத்திலும், கரிமம் C கறுப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. கார்பொனேட் குழு கறுப்பு முக்கோணமாகக் காட்டப்பட்டுளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெண்மையான ஊசி வடிவில் ஆர்கோனைட். அரகோனைட், எசுப்பானியா

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரகோனைட்&oldid=1349696" இருந்து மீள்விக்கப்பட்டது