அய் ஜிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அய் ஜிங் (艾青, 1910 -1996) சீன இலக்கியவாதி ஆவார். இவர், சீனாவிலுள்ள ஜியாங் ஹைச்செங்கில், நிலக்கிழார் குடும்பமொன்றில் 1910ஆம் ஆண்டு பிறந்தார். இவரால், பெற்றோருக்குத் தீங்கு விளையுமென ஒரு சோதிடன் கூறியதால், வளர்க்கப்படுவதற்காகத் தொலைவிலுள்ள உழவர் குடும்பப் பெண்ணொருத்தியிடம் சேர்க்கப்பட்டார்.

1929 இல் ஓவியம் கற்கப் பிரான்ஸ் சென்று சீனா திரும்பிய பின், 1932 இல் நாட்டுப்பற்று நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1936 இல் சிறையிலிருந்து வெளியே வந்ததும் தயானெ என்ற முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

1957-58களில் வலதுசாரிகளுக்கெதிரான இயக்கத்தின்போது "வலதுசாரி"யென முத்திரை குத்தப்பட்டு, இவரும் இவரது கவிதைகளும் பொதுவாழ்விலிருந்து ஒதுக்கப்பட்டன. 1978 இல் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவராய் மீண்டும் பொதுவாழ்விலும் இலக்கியத் துறையிலும் தோன்றினார்; சீன எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவருமானார்.

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்_ஜிங்&oldid=1342818" இருந்து மீள்விக்கப்பட்டது