அய்ய நாடார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ப.அய்ய நாடார்
பிறப்பு1905
சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு1982
பணிஅணில் பட்டாசுகள் மற்றும் அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி நிறுவனர்
பெற்றோர்பழனியப்ப நாடார் (தந்தை) நாகம்மாள் (தாயார்)
வாழ்க்கைத்
துணை
ஜானகியம்மாள்
பிள்ளைகள்4 மகன்கள் மற்றும் 4 மகள்கள்

இந்தியாவின் தொழில் முனைவர்களில் முக்கியமானவர் ப. அய்ய நாடார் (Ayya Nadar 1905-1982), இவர் தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான சிவகாசியில் வாழ்ந்தவர். சிறிய கிராமமாக இருந்த சிவகாசியை சண்முக நாடாருடன் இணைந்து, தொழிலிற்சிறந்த நகரமாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. அய்யன் பட்டாசுகள், அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி ஆகியவற்றை உருவாக்கினார்.[1][2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவரின் தந்தை பழனியப்ப நாடார், தாயார் நாகம்மாள். 1905 ஆம் ஆண்டு சிவகாசியில் பிறந்தார். ஜானகியம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உண்டு. 1982 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.[3]

தீப்பெட்டித் தொழிலின் தோற்றம்[தொகு]

1922ஆம் ஆண்டு சண்முக நாடாருடன் இணைந்து அய்ய நாடார் கல்கத்தா நகருக்குச் சென்று 8 மாதங்கள் தங்கி, தீப்பெட்டித் தொழிலைக் கற்று வந்தனர். செர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்பான தீப்பெட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கினார்.

பின்னர் பட்டாசு மற்றும் நுால் தயாரித்தல் எனத் தொழிலைப் பெருக்கினார். அதன் பின்னர் கல்வி நிறுவனங்களையும், அச்சகத் தொழிலையும் தொடங்கினர். 1925 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேசியப் பட்டாசுகள் என்ற பெயரில் சிவகாசியில் பட்டாசுத் தொழிலைத் தொடங்கினார். 1926 ஆம் ஆண்டு அய்ய நாடார் அணில் பட்டாசுகள் என்ற பெயரிலும், சண்முக நாடார் சேவல் அணில் பட்டாசுகள் என்ற பெயரிலும் தனித்தனியே பட்டாசுத் தொழிலைத் தொடங்கினர். 1984 ஆம் ஆண்டு முதல் அய்ய நாடாரின் புதல்வர்கள் கிரக துரை மற்றும் வைர பிரகாசம் ஆகியோர் அணில் பட்டாசுகள் தொழிலைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். 1984 ஆம் ஆண்டு முதல் அய்யன் பட்டாசுகள் என்ற பெயரிலும் புதிய பட்டாசுகள் தொழில் தொடங்கப்பட்டது.[4][5]

தொழில் வளர்ச்சி[தொகு]

அய்ய நாடார் ஆரம்பித்த அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரி, 1963 ஆம் ஆண்டு முதல் கலை மற்றும் அறிவியல் பிரிவில் பட்டப் படிப்பை நடத்தி வருகிறது. அய்ய நாடாரின் புதல்வர்கள் கிரக துரை மற்றும் வைர பிரகாசம் ஆகியோர், அனைத்துத் தொழிற்களையும் தலைமையேற்று நடத்தி வந்தனர். 1990 ஆம் ஆண்டு அய்ய நாடார் ஜானகியம்மாள் பெயரில் ஒரு பெண்கள் தொழிற் நுட்பக் கல்லுாரியும் தொடங்கப்பட்டது.[6]

சண்முக நாடாருடன் இணைந்து அய்ய நாடார் ஏழைகள் நிறைந்த சிவகாசியை தொழிலில் சிறந்த நகரமாக மாற்றினர்.[7]

சிவகாசி நகராட்சி[தொகு]

1955 முதல் 1963 வரை சிவகாசி நகராட்சியின் அவைத்தலைவராகவும் பணிபுரிந்தார். வேம்பாறு-வைப்பாறு அணைத் திட்டத்தைச் செயல்படுத்தி வறட்சி நகரான சிவகாசிக்குக் குடிநீர் கிடைக்கச் செய்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்ய_நாடார்&oldid=2693651" இருந்து மீள்விக்கப்பட்டது