உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யாகரி சம்பாசிவ ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யாகரி சம்பாசிவ ராவ்
Ayyagari Sambasiva Rao
பிறப்பு20 செப்டம்பர் 1914
மொகல்லு, மேற்கு கோதாவரி மாவட்டம்
இறப்பு31 அக்டோபர் 2003
ஐதராபாத்து (இந்தியா)
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
கல்விஇயற்பியல்
படித்த கல்வி நிறுவனங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசம், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
விருதுகள்பத்ம பூசண் விருது

அய்யாகரி சம்பாசிவ ராவ் (Ayyagari Sambasiva Rao) ஒர் இந்திய விஞ்ஞானியவார். ஏ.எசு.இராவ் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலம் 1914 முதல் 2003 வரையுள்ள காலமாகும். தெலுங்கானா மாநிலத்திலுள்ள மின்னணுவியல் நிறுவனத்தின் நிறுவனரும் இவரேயாவார்.

பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டமும் இசுடான்போர்ட்டு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முதுநிலை பட்டமும் முடித்தார். [1][2]

அணுசக்தியின் அமைதியான பயன்பாடுகளைப் பற்றிய ஐ.நா. மாநாடுகள் உட்பட அறிவியல் வளர்ச்சி குறித்த பல பன்னாட்டு மாநாடுகளில் ராவ் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பல பன்னாட்டு பத்திரிகைகள் உட்பட பல அறிவியல் பத்திரிகைகளின் தலையங்கம் மற்றும் ஆலோசனைக் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

[தொகு]

தேசத்திற்காக இவர் செய்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக ராவிற்கு பல விருதுகளும் கௌரவங்களும் கிடைத்தன. [2]

  • 1969 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைகழகத்தின் அறிவியல் முனைவர் பட்டம்
  • 1974 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழக உறுப்பினர்
  • 1976 ஆம் ஆண்டு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகளின் கூட்டமைப்பின் சாதனையாளர் விருது
  • 1977 ஆம் ஆண்டு தேசிய வடிவமைப்பு விருது
  • 1988 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேச அறிவியல் கழகத்தின் சிறந்த அறிவியலாளர் விருது
  • 1989 ஆம் ஆண்டு நாயுடம்மா நினைவக தங்கப் பதக்கம்
  • செகந்திராபாத் நகரில் ஒரு பகுதிக்கு ஏ.எசு ராவ் நகர் என்ற பெயர்
  • 2014 ஆம் ஆண்டு நவம்பர் 16 பிறப்பு நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு

மரபு

[தொகு]

இவரது பெயர் சூட்டப்பட்ட ஏ.எசு. ராவ் நகர் ஐதராபாத்தின் ஒரு முக்கிய புறநகர்ப் பகுதியாகும். [4] ராவ் தொடர்பாக தி மேன் வித் எ விசன் என்ற சுயசரிதையை இவரது நண்பர் டி. மோகனா ராவ் எழுதியுள்ளார். [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. History of Electronics Corporation of India Ltd
  2. 2.0 2.1 "Dr A. S. Rao (1914-2003)". Archived from the original on 30 January 2014.
  3. 3.0 3.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  4. "In memory of the ECIL founder - SECN". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.
  5. "A.S. Rao – scientist, teacher, entrepreneur". The Hindu. 2014-09-21. பார்க்கப்பட்ட நாள் 2018-04-17.

மேலும் வாசிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யாகரி_சம்பாசிவ_ராவ்&oldid=4053550" இலிருந்து மீள்விக்கப்பட்டது