அய்யதேவரா காளீசுவர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யதேவரா காளீசுவர ராவ் (Ayyadevara Kaleswara Rao)(22 ஜனவரி 1882 - 23 பிப்ரவரி 1962) என்பவர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் சட்டமன்றத் தலைவர் ஆவார்.[1][2][3] இவர் கிருஷ்ணா மாவட்டம், நந்திகம கிராமத்தில் பிறந்தார் (முன்னர் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணம் இப்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதி). விசயவாடாவில் உள்ள காளீசுவர ராவ் சந்தைக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ராவ் வருவாய் சேகரிப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் மச்சிலிப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்தார். மச்சிலிப்பட்டினத்தில் உள்ள நோபல் கல்லூரியில் FA படித்தார். இரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு அவர்களால் இங்குக் கற்பிக்கப்பட்டார். 

ராவும் ராவின் நண்பர்களும் 1911[4] ஆண்டு விஜயவாடா மகாத்மா காந்தி சாலையில் இராம் மோகன கிரந்தாலயத்தைத் தொடங்கி ஆந்திர கிரந்தலயோத்யமத்திற்கு (நூலக இயக்கம்) அடித்தளம் அமைத்தனர். தெலுங்கில் உள்ள இலக்கியப் படைப்புகளுக்கு நிதியளித்து ஊக்குவிப்பதற்காகவும், ஐரோப்பிய மற்றும் பிற இந்திய மொழிகளிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்ப்பதற்காகவும், விக்ஞான சந்திரிகா என்ற இலக்கியச் சங்கத்தின் நிறுவி உறுப்பினராகவும் இருந்தார்.

வழக்கறிஞர் பணி[தொகு]

காளீசுஸ்வர ராவ் தனது தாயார் மற்றும் மனைவியுடன் 1904ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சட்டக் கல்லூரியில் சேர சென்னைக்குச் சென்றார். இதன்பிறகு, இவர் பிரித்தானியா இந்தியப் பேரரசில் பணியாற்ற விரும்பாததால், வருவாய் ஆய்வாளர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி வாய்ப்புகளை நிராகரித்தார். 1906ஆம் ஆண்டு சூன் மாதம் விஜயவாடாவில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். 21 மார்ச் 1921 அன்று, மகாத்மா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், இவர் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விட்டு விலகினார்.

அரசியல்[தொகு]

ராவ் 1956[5] முதல் 1962 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சபாநாயகராக இருந்தார்.

பத்ம பூசண் விருது[தொகு]

ராவின் பொதுச் சேவைக்காக இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதினை 1960ஆம் ஆண்டு வழங்கியது.[6]

மேற்கோள்கள்[தொகு]