அயோனிகா பால்
| தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||
| பிறப்பு | 23 செப்டம்பர் 1992 மும்பை, இந்தியா | |||||||||||||||||||
| உயரம் | 163 cm (5 அடி 4 அங்) | |||||||||||||||||||
| விளையாட்டு | ||||||||||||||||||||
| நாடு | இந்தியா | |||||||||||||||||||
| விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | |||||||||||||||||||
| நிகழ்வு(கள்) | 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி | |||||||||||||||||||
| பயிற்றுவித்தது | தாமசு பார்னிக்கு | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||
| 26 சூலை 2014 இற்றைப்படுத்தியது. | ||||||||||||||||||||
அயோனிகா பால் (Ayonika Paul) இந்தியாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆவார். 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று பிறந்தார். 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி வகை போட்டியில் இவர் போட்டியிடுகிறார். 2014ஆம் ஆண்டு கிளாசுகோவில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்வுக் குழுவால் அயோனிகா பால் உறுதிப்படுத்தப்பட்டார். அங்கு நடைபெற்ற போட்டியில் 51 போட்டியாளர்களில் 47ஆவது இடத்தைப் பிடித்தார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இரயில்வே ஊழியரான ஆசிம் பால் மற்றும் அபர்ணா பால் ஆகியோரின் மகளாக, 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மும்பையில் பிறந்தார். மும்பையின் செம்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பிள்ளையின் தகவல் தொழில்நுட்ப பொறியியல், ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். மேலும் மின்னணு பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அயோனிகா பால் ஒரு காலத்தில் சிறந்த நீச்சல் வீராங்கனையாக இருந்தார்.[2] ஆனால் மெதுவாக அவரது ஆர்வம் துப்பாக்கி சுடுதலில் வளர்ந்தது. முன்னதாக சுலோவேனியாவில் நடைபெற்ற 2014 பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு உலகக் கோப்பையில் போட்டியிட்டு வெண்கலம் வென்றார்.[3][4]
மின்னணுவியல் பாடத்தில் இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[5]
தொடக்கநிலை பயிற்சி
[தொகு]தனது தந்தை பயிற்சியாளராக இருந்தபோது, ஆரம்ப நாட்களில் நீச்சல் போட்டியாளராக இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இருப்பினும், 2006 ஆம் ஆண்டு ஏதென்சு ஒலிம்பிக்கில் இராச்யவர்தன் சிங் ரத்தோட்டைப் பார்த்தபோது, இவரது ஆர்வம் துப்பாக்கிச் சூட்டில் திரும்பியது. 2004ஆம் ஆண்டு ஏதென்சு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற இராச்யவர்தன் சிங் ரத்தோட்டை இவர் பார்த்தார்.
தனது முதல் துப்பாக்கியான இறக்குமதி செய்யப்பட்ட பீன்வெர்க்வானை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கினார். தந்தையின் கடன்கள் மூலம் இத்துப்பாக்கியை வாங்கி, துப்பாக்கிச் சூட்டில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
வாராந்திர பயிற்சி புனேவில் நிகழதது. அங்கு சிறந்த பயிற்சி வசதிகள் இருந்தன. மேலும் இவர் தனது இலக்குகளை அடைய தனது படிப்பு மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் பல பணிகளை சமாளிக்க வேண்டியிருந்தது.[4]
தொழில்
[தொகு]2007- செருமனி நாட்டில் நடந்த பன்னாட்டு இளையோர் போட்டியில் தனது முதல் பதக்கமான இரட்டை தங்கத்தை வென்றார்.[4]
2008- மியூனிக் நகரத்தில் நடந்த பன்னாட்டு இளையோர் துப்பாக்கி சுடும் போட்டியில் பெற்ற தங்கப் பதக்கம் இவருக்கு பன்னாட்டு வாழ்க்கைக்கு வழி வகுத்தது. பிரபலமும் அடைந்தார்.[4][6][7][8]
2011- குவைத்தில் நடந்த ஆசிய இளையோர் வாகையாளர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2012- 2015 ஆம் ஆண்டு ஆசிய காற்றுத் துப்பாக்கி வாகையாளர் போட்டியில் பெண்கள் 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கிப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2014- இசுக்காட்லாந்தின் கிளாசுகோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றதோடு, 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி பிரிவு போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.[9][10][11]
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகாராட்டிராவை பிரதிநிதித்துவப்படுத்தி கேரளத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[12]
2016- புது தில்லியில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால் ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான தகுதி பெற்றவர்களில் ஒருவரானார். ஆனால் அதே போட்டியில் இருந்து சீக்கிரமே வெளியேறினார். அவருக்கு ஒலிம்பிக் கோல்ட் குவெசுட்டு பார் ரியோ என்ற அரசு சாரா நிறுவனம் ஆதரவு அளித்தது.[13][14][15]
2014-பில்லாயின் தகவல் தொழில்நுட்ப பொறியியல், ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மின்னணு பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
2018- மும்பை பல்கலைக்கழகத்தில் பட செயலாக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற மின்னணு பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கணினி பார்வையைப் பயன்படுத்தி நிகழ்நேர தகவமைப்பு இலக்கு கண்காணிப்பில் பணிபுரிந்த இவரது கையெழுத்துப் பிரதி மின்னணு வடிவமைப்பு பொறியியலில் வெளியிடப்பட்டது.[16]
பாராட்டுகள்
[தொகு]மகாராட்டிர அரசு இவருக்கு சிவ் சத்ரபதி விருதை வழங்கி சிறப்பித்தது.
பன்னாட்டு துப்பாக்கி சுடும் போட்டி பதக்கங்கள்
[தொகு]| எண். | நிகழ்வு | வாகையாளர் | ஆண்டு | இடம் | பதக்கம் |
|---|---|---|---|---|---|
| 1 | 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி | பன்னாட்டுப் போட்டி | 2014 | மரிபோர் | வெண்கலம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rio Olympics 2016: Jitu Rai finishes 8th in 10m Air Pistol; Apurvi Chandela, Ayonika Paul out in qualifiers". First Post. 7 August 2016. http://www.firstpost.com/sports/rio-olympics-2016-jitu-rai-finishes-8th-in-10m-air-pistol-apurvi-chandela-ayonika-paul-out-in-qualifiers-2939890.html. பார்த்த நாள்: 8 August 2016.
- ↑ "Women's 10 metre air rifle Finals". glasgow2014.com. 26 July 2014. Archived from the original on $128 July 2014. Retrieved 26 July 2014.
- ↑ "Apurvi Chandila wins gold, Ayonika Paul silver in 10m air rile". IANS. news.biharprabha.com. 26 July 2014. http://news.biharprabha.com/2014/07/apurvi-chandila-wins-gold-ayonika-paul-silver-in-10m-air-rile/. பார்த்த நாள்: 26 July 2014.
- 1 2 3 4 Rashid, Omar. "Ayonika Paul now aims for the Olympic gold" (in en). The Hindu. http://www.thehindu.com/sport/other-sports/ayonika-paul-now-aims-for-the-olympic-gold/article6275429.ece.
- ↑ "ISSF - International Shooting Sport Federation - issf-sports.org". www.issf-sports.org. Retrieved 2017-05-13.
- ↑ "Know your Indian Olympian: 10 things to know about Ayonika Paul" (in en-IN). https://in.news.yahoo.com/know-indian-olympian-10-things-224300142.html.
- ↑ "Ayonika Paul: 10 things to know about India's talented shooter headed for the Rio Olympics 2016". 2016-07-05. https://www.sportskeeda.com/shooting/know-your-indian-olympian-10-things-know-about-ayonika-paul.
- ↑ "Interview with shooter Ayonika Paul, who is aiming to hit the bull's eye at the Commonwealth Games". 2014-05-27. https://www.sportskeeda.com/general-sports/interview-ayonika-paul-india.
- ↑ NDTVSports.com. "Commonwealth Games 2014: India's Apurvi Chandela Wins Gold, Ayonika Paul Gets Silver in 10m Air Rifle – NDTV Sports". NDTVSports.com இம் மூலத்தில் இருந்து 2019-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190103210342/https://sports.ndtv.com/commonwealth-games-2014/commonwealth-games-2014-india-s-apurvi-chandela-wins-gold-ayonika-paul-gets-silver-in-10m-air-rifle-1515292.
- ↑ Viswanath, G.. "There is more to come: Ayonika" (in en). The Hindu. http://www.thehindu.com/sport/other-sports/ayonika-paul-aims-to-win-a-medal-at-the-rio-olympics-in-2016/article6275680.ece.
- ↑ "Commonwealth Games: Apurvi Chandela wins gold, Ayonika Paul bags silver in Women's 10m Air Rifle - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/commonwealth-games-2014/india-at-glasgow/Commonwealth-Games-Apurvi-Chandela-wins-gold-Ayonika-Paul-bags-silver-in-Womens-10m-Air-Rifle/articleshow/39060091.cms.
- ↑ "National Games 2015 Kerala Shooting Results and Medal Winners List". www.indiancrux.info. Archived from the original on $122 January 2015. Retrieved 2017-05-13.
- ↑ "Ayonika Paul Profile: 10m Air Rifle women's" (in en-US). The Indian Express. 2016-08-02. http://indianexpress.com/sports/rio-2016-olympics/ayonika-paul-women-10m-air-rifle-shooting-2948554/.
- ↑ "India at Rio Olympics, Highlights: Heartbreaking opening day for India" இம் மூலத்தில் இருந்து 7 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160807170250/http://indiatoday.intoday.in/olympics2016/story/india-at-rio-olympics-2016-apurvi-chandela-jitu-rai-shooting/1/733747.html.
- ↑ PTI. "Ayonika Paul gears up for Rio Olympics" (in en). The Hindu. http://www.thehindu.com/sport/other-sports/Ayonika-Paul-gears-up-for-Rio-Olympics/article14404929.ece.
- ↑ Paul, Ayonika (2018-08-22). "Real Time Adaptive Tracking System Using Computer Vision" (in en). Journal of Electronic Design Engineering 4 (1,2). http://www.matjournals.in/index.php/JOEDE/article/view/2815. பார்த்த நாள்: 2026-02-25.