அயோத்தியா மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபத்தின் நுழைவாயில்

அயோத்தி மண்டபம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் உள்ள சத்சங்கத்திற்காக (சமய வளர்ச்சி / சொற்பொழிவுகளில் ஒத்த எண்ணம் அல்லது பொதுவான ஆர்வம் கொண்டவர்கள்) உருவாக்கப்பட்ட ஒரு பொதுவான கூட்ட அரங்கம் ஆகும்.இந்த மண்டபம் ஸ்ரீ ராம் சமாஜத்தால் நிர்வகிக்கப்படுகிறது. [1] மிதிலாபுரி கல்யாண மண்டபம் - என்ற பெயருடன் திருமண மண்டபம், ஸ்ரீ சீதாராம் வித்யாலயா பள்ளி மற்றும் ஞான வாபி - இறுதி சடங்குகளை நடத்துவதற்கான இடம் ஆகிய அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

1954 ஆம் ஆண்டு இம்மண்டபம் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இது மாம்பலம் ஐயர்களுக்காக (பிராமண சமூகத்தின் ஒரு பிரிவு) செயல்பட்டது. பின்னர் இது மற்ற அனைத்து சமூகங்களுக்கும் பலனளிக்கும்படி விரிவு செய்யப்பட்டது. எனினும் இதுவரை பிராமண சமூகத்திற்கான சங்கம் / சந்திப்பு இடமாகவே இது அறியப்படுகிறது.

இங்கு ஆண்டு முழுவதும், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் பல மரபார்ந்த சந்திப்புகள், கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில், அயோத்தி மண்டபத்தில் ராம நவமி மஹா-உத்சவ் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நிர்வாகம்[தொகு]

பதிவு செய்யப்பட்ட ஸ்ரீ ராம் சமாஜத்தின் பொதுக்குழுவால் தேர்தெடுக்கப்பட்டப் பெற்ற 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவால் அயோத்தியா மண்டபம் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கான தலைவர், துணைத் தலைவர், செயலாளர், உதவியாளர். செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளில் இந்த குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

வழக்குகள்[தொகு]

சனவரி 2013ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறையால் அயோத்தியா மண்டபம் (ஆங்கிலம்:Hindu Religious and Charitable Endowments Department (HR &CE) கையகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து 2014-ஆம் ஆண்டில் சிறீ ராம் சமாஜத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏப்ரல் 2022-இல் அயோத்தியா மண்டபம் ஒரு இந்துக் கோயில் எனக்கூறி தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறையால் கையகப்படுத்தப்பட்டது.[2] இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அயோத்தி மண்டப நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தனியார் அமைப்பான ஸ்ரீராம் சமாஜ்ஜின் நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது என்றும் சமாஜத்தின் நிர்வாகத்தில் அல்லது நிதி நடவடிக்கைகளில் தவறுகள் இருப்பின் அதனை அரசு விசாரணை செய்யலாம் என தீர்ப்பளித்து வழககை ஒத்தி வைத்தனர்.[3][4] [5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". 3 July 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 July 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  2. அயோத்யா மண்டபம் அறநிலையத்துறைக்கே சொந்தம்!
  3. மீண்டும் ஸ்ரீ ராம் சமாஜ் வசமாகும் அயோத்தியா மண்டபம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  4. High court to set aside Tamil Nadu government takeover of Ayodhya temple
  5. High Court to pronounce orders today in Ayodhya Mandapam case
  6. Ayodhya Mandapam Case: Madras High Court To Pronounce Order Today In Appeal Challenging Take Over By HR&CE Department
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தியா_மண்டபம்&oldid=3423389" இருந்து மீள்விக்கப்பட்டது