உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்தியா பிரசாத் உபாத்தியாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யாவசஸ்பதி

அயோத்தியாசிங் உபாத்தியாயா
பிறப்புபண்டிட் போலாநாத் உபாத்யாயா
(1865-04-15)15 ஏப்ரல் 1865
ஆசம்கர், வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 மார்ச்சு 1947(1947-03-16) (அகவை 81)
ஆசம்கர், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
புனைபெயர்‘ஹரி அவத்'
தொழில்எழுத்தாளர், கட்டுரையாளர், அறிஞர், கவிஞர்

அயோத்தியா சிங் உபாத்தியாயா ஹரி அவத், (15 ஏப்ரல் 1865 - 16 மார்ச் 1947) என்பவர் ஓர் இந்தி எழுத்தாளர் ஆவார். இந்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைவராக இருந்த இவருக்கு வித்யாவசஸ்பதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.[1][2]

வாழ்க்கை

[தொகு]

இவர் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஆசம்கர் என்னும் ஊரில் பிறந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தபின் இவர் சொந்த ஊரிலேயே பள்ளி ஆசிரியரானார். அப்போது இவருக்குச் சூமர்சிங் என்ற சாதுவிடம் தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவருக்கு இந்தி இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. ஆங்கிலத்திலிருந்தும் உருதுவிலிருந்தும் இவர் பல நூல்களை மொழிபெயர்த்தார். பின்னர்ச் சட்டக்கல்வி பெற்று நீதிபதியாக வேலை பார்த்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் இவர் 1923 இல் காசிப் பல்கலைக் கழகத்தில் இந்திப் பேராசிரியரானார். 1941 வரை அங்கு இந்தித் துறையில் பணிபுரிந்தார். சமூகச் சீர்திருத்தத்திலும் இவர் ஆர்வங் கொண்டிருந்தார். உருது, பாரசீகம், வடமொழி ஆகிய மூன்றிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.[3] ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்ட பிறகு 'ஹரி ஔத் ஜி' கிராமத்தில் இலக்கிய சேவையில் ஈடுபட்டார். இவரது இலக்கிய சேவை அவருக்கு கணிசமான புகழைப் பெற்றுத் தந்தது.[4] அவர் 1947 இல் அசம்கரில் இறந்தார்.

இலக்கியப் பணிகள்

[தொகு]
  • ஹிந்தி பாஷா அவுர் உஸ்கே சாஹித்ய கா விகாஸ்
  • கரம் வீர்
  • ஏக் பூண்ட்
  • பூல் அவுர் காந்தா
  • வைதேஹி வனவாஸ்
  • பிரியா பிரவாஸ்
  • பாரிஜாதம்
  • கல்ப்லதா
  • முட்டாள் பாட்டே
  • ஏக் டிங்கா

குறிப்புகள்

[தொகு]
  1. "Profile at Kavita Kosh". Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  2. "Literary work of Hari Oudh". Archived from the original on 6 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.
  3. தமிழ்க் கலைக்களஞ்சியம் முதல் தொகுதி அயோத்தியாசிங் உபாத்தியாயா
  4. "The Tribune, Chandigarh, India - Opinions". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 October 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]