அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கோதண்டராமசுவாமி கோவில், சேலம்
பெயர்
பெயர்:அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:சேலம், அயோத்தியாபட்டினம், சேலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஏற்காடு
மக்களவைத் தொகுதி:சேலம்
கோயில் தகவல்
மூலவர்:கோதண்டராமசுவாமி
தாயார்:சீதை
வரலாறு
கட்டிய நாள்:15ம் நூற்றாண்டு

அயோத்தியாபட்டினம் கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மையப் பகுதியில் அயோத்தியாப்பட்டிணம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.[1]

தல வரலாறு[தொகு]

ராவணன் வரதம் முடிந்து ராமன், சீதை, லட்சுமணன், அனுமன், சுக்கிரீவர், விபீஷணர் மற்றும் படை வீரர்களுடன் அயோத்தி திரும்பிய பொது இங்கு தங்கி இரவு ஓய்வெடுத்தனர். அதற்குள் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டதை உணர்ந்து அயோத்தி செல்வதற்கான காலம் தாமதமானதல் இங்கேயே பட்டாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் அமைப்பு[தொகு]

விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் கோதண்டராமசுவாமி, சீதை சன்னதிகளும், விநாயகர், கருடாழ்வர், ஆஞ்சநேயர், ஆழ்வர்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)