அயோத்திதாசப்பண்டிதர்
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
தமிழ்ச்சான்றோர்களில் பலர் சமூக சீர்திருத்தவாதிகளாகவும் திகழ்கின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் காத்தவராயன் என்ற இயற்பெயருடைய அயோத்திதாசப்பண்டிதர் ஆவார்.
பொருளடக்கம்
பிறப்பு[தொகு]
இந்தியாவிலுள்ள தமிழ்நாடுமாநிலத்திலுள்ள சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள மக்கிமாநகரில்1845இல் மே திங்கள் இருபதாம் நநாள் பிறந்தார்.இவரது தந்தை பெயர் கந்தசாமி. இவருக்குப் பெற்றோர் இட்டபெயர் காத்தவராயன்.
பெயர்க்காரணம்[தொகு]
வீ.அயோத்திதாசப்பண்டிதர் என்பவரிடம் கல்வி கற்ற காத்தவராயன் அவருடைய கவிதைகளைத் தாம் தொடங்கிய ஒருபைசாத்தமிழன் இதழில் வெளியிட்டார்.தம் இயற்பெயரை விடுத்து ஆசிரியர் பெயரையே சூட்டிக்கொண்டார்.
சமூகப்பணி[தொகு]
இவர் மனித வாழ்க்கைக்குத் தேவையற்ற சாதி மதப்பிரச்சினைகள் தீர மக்கள் அடிப்படை உரிமைகள் பெற அல்லும் பகலும் பாடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைக்கு அரும்பாடுபட்டார்.
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி வசதியோடு உயவிய்தொகை அளிக்கவும் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுமேலல் ம் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும் பொதுஇடங்களில் நுழைய உரிமையும் வேண்டுமென வலியுத்தி வெற்றிகண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சூழலில் பிரம்மஞான சபை ஆல்காட் தொடர்பால் சென்னையில் ஐந்து இடங்களில் ஆல்காட் பஞ்சம் பள்ளிகள் எனத் தலித்துகளுக்கு இலவசங்களுக்கு நிறுவினார்.
புதிய தீபாவளி[தொகு]
தீபங்களின் வரிசை தீபாவளி.கண்ணன் நரகாசுரனைக் கொன்று வெற்றி பெற்ற நாளே இத்திருநாள் என்றும் மகாவீரர் முக்தியடைந்த நாளே தீபாவளி என்றும் இன்றுவரை பேசப்படுகிறது.ஆனால் பெளத்த சமயத்தில் ஆழங்கால்பட்டவரான அயோத்திதாசப்பண்டிதர் தமது மருத்துவ ஆராய்ச்சியின் படி எள்செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்று புதிய விளக்கம் தந்தார்.
இறப்பு[தொகு]
199ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம்நாள் இயற்கை எய்தினார்.