உள்ளடக்கத்துக்குச் செல்

அயாத்து பக்சி பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 17°19′34″N 78°35′56″E / 17.32615°N 78.59901°E / 17.32615; 78.59901
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயாத்து பக்சி பள்ளிவாசல்
Hayat Bakshi Mosque
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்17°19′34″N 78°35′56″E / 17.32615°N 78.59901°E / 17.32615; 78.59901
சமயம்இசுலாம்
செயற்பாட்டு நிலைஇயங்குகிறது

அயாத்து பக்சி பள்ளிவாசல் (Hayat Bakshi Mosque) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள அயாத்து நகரில் அமைந்துள்ளது. அயாத்து பக்சி பேகம் பள்ளிவாசல் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. 1672 ஆம் ஆண்டில் கோல்கொண்டாவின் ஐந்தாவது சுல்தானான அப்துல்லா குதுப்சாவின் ஆட்சியின் போது இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. அப்போது இதற்கு அயாத்து பக்சி பேகம் என பெயரிடப்பட்டது.[1][2]

இந்தியாவின் ஐதராபாத்து நகரத்தின் கோல்கொண்டாவில் உள்ள குதுப் சாகி கல்லறைகள் அமைந்துள்ள இடத்தில் இதேபெயரில் பள்ளிவாசல் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கட்டடக் கலை

[தொகு]

பள்ளிவாசல் வழக்கமான குதுப்சாகி பாணி கட்டிடக்கலையில் களைப்புற்ற பயணிகள் ஓய்வெடுப்பதற்கான சராய் எனப்படும் இல்லத்துடன் கட்டப்பட்டுள்ளது. முகப்பில் ஐந்து அலங்கார வளைவுகள், இரண்டு தூபிகள், ஓர் ஒப்பனைப்பட்டை மற்றும் பாதுகாப்பிற்கான கைப்பிடிச்சுவர் ஆகியவை உள்ளன. இக்கைப்பிடிச் சுவர் கட்டிடங்களுக்கு இடையே நீண்டு மூடப்பட்ட பன்னிரண்டு பக்க காட்சிக்கூட பாதை முழுவதற்கும் ஓடுகிறது. தொழுகை கூடம் உயர்ந்த ஒரு மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் கிழக்குப் பக்கத்திற்கும் மசூதிக்கும் கீழே ஒரு கழுவு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரிய வளாகம் கிட்டத்தட்ட 5 ஏக்கர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. பயணிகளுக்கான ஓய்வு இல்லம் 150 மீட்டருக்கு 130 மீட்டர் நீள அகல முற்றத்தில் உள்ளது. இந்த விருந்தினர் மாளிகை 130 அறைகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பள்ளிவாசலுக்கான ஆதி பாவ்லி எனப்படும் யானை கிணறு பள்ளிவாசலின் வடகிழக்கில் மிகப் பெரிய கிணறாக வெட்டப்பட்டுள்ளது.[1][3]

சர்ச்சை

[தொகு]

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையானது, பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையத்திடம் அயாத்து பக்சி பேகம் பள்ளிவாசலை ஒட்டியிருந்த 20 கட்டமைப்புகளை இடிக்க அனுமதி கோரியது. இது 1960 ஆம் ஆண்டின் புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தை மீறிய செயல் என்ற சர்ச்சை எழுந்தது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Hayat Bakshi Begum Mosque in Hayath Nagar India". India9.com. 2005-06-07. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09.
  2. "hayat Bakshi begum masjid". gigapan. 2010-08-02. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09.
  3. Gopalan, Madhumita (2016-04-23). "Photo essay: Hayath Bakshi Begum- The hand of the king, three times over". The News Minute. https://www.thenewsminute.com/article/photo-essay-hayath-bakshi-begum-hand-king-three-times-over-42086. 
  4. "Structures around mosque to be razed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-05-25. Archived from the original on 2011-09-16. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09.