அயனியாக்கப்பட்ட வளிமண்டலம்

அயனியாக்கப்பட்ட வளிமண்டலம் (Ionosphere) என்பது பூமிக்கு மேல் 60 கி.மீ. இலிருந்து (37 மைலிலிருந்து) 1000 கி.மீ. வரை (620 மைல் வரை) வியாபித்திருக்கும், அயனிகளாக்கப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்ட வளிமண்டலப் பகுதியாகும். சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் புற ஊதாக் கதிர்களின் ஆற்றலால் இங்குள்ள வளியின் மூலக்கூறுகள் அயனியாக்கப்பட்டுள்ளன. அதாவது நேர்மின் சுமையும் எதிர்மின் சுமையும் பெற்றுள்ளன. மார்க்கோனி என்ற அறிவியல் வல்லுநர் இந்த அயனி அடுக்குகள் வானொலி அலைகளை எதிரொலிக்கும் தன்மையன என்றும் இப்பண்பைப் பயன்படுத்தி வானொலி அலைகளை உலகத்தின் பல பாகங்களுக்கு அனுப்பலாம் என்றும் செயல் விளக்கமளித்தார்.