அம்லெட்(Hamlet)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
The American actor Edwin Booth as Hamlet, ca. 1870

அம்லெட் (Hamlet) , 1599 மற்றும் 1602 க்கு இடையில் நிச்சயமற்ற தேதியில் வில்லியம் ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்ட ஒரு சோக நாடகம்.

கதை சுருக்கம்[தொகு]

இது டென்மார்க்கில் அமைக்கப்பட்ட நாடகம். அம்லெட் (Hamlet),ஒரு அரச குமாரன்.தன் தந்தையையின் காதில் விஷம் ஊற்றி கொன்றுவிட்டு தன் தாயை கவர்ந்துகொள்ளும் சிற்றப்பன் க்ளியாடியஸ்யை (Claudius) பழிவாங்கச் சொல்லி ஆவியாக வரும் தந்தையின் வேண்டுகோளை ஏற்று அது ஒன்றை மட்டுமே நினைவில் கொண்டு வாழ்ந்து மறையும் ஒருவரின் கதை.தனது காதலி ஒப்பீலியாவின்(Ophelia) தந்தையாயிருந்தாலும்,தனது சிற்றப்பனோடு சேர்ந்து சதி செய்த மந்திரியைக் கொன்றுவிடும் அம்லெட் நாடு கடத்தப்படுகிறான். சிறிது காலம் சென்று நாடு திரும்பும் அம்லெட், எதிரே ஒரு சவ ஊர்வலம் வருவதைப் பார்க்கிறான்.அது தனது காதலி ஒப்பீலியாவின் இறுதி ஊர்வலம் என அறிந்ததும் கவலையும் அதிர்ச்சியும் ஒருங்கே அவனை வாட்டுகிறது.


புதைகுழியுனுள் குதித்து ஒப்பீலீயாவைக் கைகளில் ஏந்தி கதறுகிறான். அவன் பகை தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற சிற்றப்பன் மேலும், அவனுக்கு உதவியாயிருந்த ஒப்பீலியாவின் தந்தை மந்திரியின் மேலும் தான். அதே நேரம், அங்கு இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒப்பீலியாவின் சகோதரன், தனது சகோதரி ஒப்பீலியாவும்,தனது தந்தையும் இறப்பதற்கு காரணமான அம்லெட்டுடன் சண்டையிடுகிறான்.சிற்றப்பனின் சூழ்ச்சியில் மந்திரி மகனின் வாளில் விஷம் பூசப் படுகிறது.சிறிது பட்டாலும், ஹேம்லட் இறந்துவிடுவான் என திட்டமிடுகிறான் அரசனாக இருக்கும் சிற்றப்பன். அதே போல சண்டையில் மந்திரி மகனின் விஷம் தோய்ந்த வாள் அவனக் கீறுகிறது.ஆனால் தனது வாளை இழக்கும் ஹேம்லட், மந்திரி மகனின் வாளை பறித்து அவனையே குத்திவிடுகிறான்.


இதற்கிடையே, தனது மகன் வெற்றி பெற்றுவிட்டான் எனும் மகிழ்ச்சியில் அருகில் இருந்த மதுக்கோப்பையை எடுத்து அதில் இருந்த பானத்தை அருந்திவிடுகிறாள் அரசி. அது, 'ஹேம்லட் ஒரு வேளை ஜெயித்து வந்துவிட்டால், அவனுக்காக தயாரிக்கப்பட்ட விஷம் கலந்த பானம்.திகைத்து நிற்கும் ஹேம்லட்டிடம் வாளில் விஷம் தோய்ந்திருந்ததையும், சிற்றப்பனின் சூழ்ச்சியையும் மரணப்படுக்கையில் சொல்லிவிடுகிறான் மந்திரி மகன். இதையறிந்த ஹேம்லட் மீண்டும் அந்த விஷம் தோய்ந்த வாளை எடுத்து தன் சிற்றப்பனைக் குத்திவிடுகிறான். அனைவரும் இறக்கிறார்கள். 

கதாபாத்திரங்கள்[தொகு]

  • அம்லெட்: இளவரசன்.
  • கிளாடியஸ்: டென்மார்க் மன்னன் மற்றும் அம்லெட்டின் மாமா.
  • பொலோனியஸ்: தலைமை ஆலோசகர்.
  • ஓபிலியா: பொலோனியஸ் மகள்.Saxo original 001.jpg
Hamlet mistakenly stabs Polonius (Artist: Coke Smyth, 19th century).

[[படிமம்:Eugène_Ferdinand_Victor_Delacroix_018.jpg|இடது|thumb|The gravedigger scene{{Efn|The gravedigger scene is in Hamlet 5.1.1–205.


ஹாரேட்டோ: அம்லெட்டின் உண்மையான நண்பர்.

லாரெர்ட்ஸ்: பொலோனியஸின் மகன்.

ஒசிக்:ஒரு நீதிமன்றம்.

மார்செல்லஸ் : ஒரு அலுவலர்.

பார்னார்டோ: ஒரு அதிகாரி.

பிரான்சிஸ்கோ : ஒரு சோல்ஜர்.

ரெனால்டோ : பொலோனியஸின் வேலைக்காரன்.

போர்ட்டிப்ரஸ் : நோர்வே பிரின்ஸ்.

கிரெவெடிரிகர்ஸ் : ஒரு செக்ஸ்டன்.

வால்டிமண்ட் மற்றும் கொர்னேலியஸ்:பாதுகாப்பாளர்கள்.

ரோசென்கிராண்ட்ஸ் மற்றும் கில்டன்ஸ்டெர்ன்: ஹேம்லட்டின் நண்பர்கள்.

வீரர் கிங், வீரர் ராணி, லூசியானஸ் போன்ற வீரர்கள் 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்லெட்(Hamlet)&oldid=2356606" இருந்து மீள்விக்கப்பட்டது