அம்ரோகா கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்ரோகா கொலை வழக்கு
Amroha murder case
இடம்அம்ரோகா உத்தரப் பிரதேசம், இந்தியா.
நாள்ஏப்ரல் 14, 2008; 14 ஆண்டுகள் முன்னர் (2008-04-14)
தாக்குதல்
வகை
குடும்பக்கொலை,
இறப்பு(கள்)7
தாக்கியோர்சப்னம் மற்றும் சலீம்

அம்ரோகா கொலை வழக்கு (Amroha murder case) இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோகா நகரைச் சேர்ந்த சப்னம் என்ற பெண் 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காதலருடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொடூரமாக கொலை செய்ததை தொடர்ந்த நடைபெற்ற ஒரு வழக்காகும். ஆறு பேரை மயக்கமூட்டி பின்னர் வெட்டிக் கொன்றார்; ஏழாவது பலியான பத்து மாத குழந்தைக்கு மயக்கமூட்டாமலும் இவர்கள் கொலை செய்தனர். [1][2] இந்த வழக்கில் சப்னம் மற்றும் சலீம் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டும், உச்சநீதிமன்றம் 2015-ஆம் ஆண்டும் உறுதி செய்தன. சப்னம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை[தொகு]

2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஊடக அறிக்கைகள் சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண்மணியாக சப்னம் இருப்பார் என்று கூறின.[3] உத்தரபிரதேச ஆளுநரும், குடியரசுத் தலைவரும் சப்னமின் கருணை மனுவை நிராகரித்தனர். சப்னமின் 12 வயது மகன் முகமது தாச்சு, அவரது தண்டனையை ரத்து செய்யுமாறு இந்திய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.[4][5]

பாதிக்கப்பட்டவர்கள்[தொகு]

பெயர் உறவுமுறை வயது
சௌகத் அலி தந்தை 55
ஆசுமி தாய் 50
அனீசு அண்ணன் 35
அஞ்சும் அண்ணி 25
இரசீத்து தம்பி 22
இரபியா உறவினர் 14
ஆர்சு மருமகன் 10 மாதம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Vishnu, Uma (2015-06-07). "Shabnam & Saleem: The relationship that claimed seven lives of a family". The Indian Express (in ஆங்கிலம்). 2015-06-09 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-02-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Amroha killings: Finality of death penalty important, says SC". Tribune India (in ஆங்கிலம்). 23 January 2021. 2021-02-18 அன்று பார்க்கப்பட்டது.
  3. "சுதந்திர இந்தியாவில் பெண்ணுக்கு முதல் தூக்கு தண்டனை: ஷப்னம் செய்தது என்ன?". BBC News தமிழ். 2022-05-21 அன்று பார்க்கப்பட்டது.
  4. Sachdev, Geetika (20 February 2021). "Shabnam Ali: The First Woman To Be Hanged In Independent India". in.makers.yahoo.com (in ஆங்கிலம்). 2021-02-20 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-02-20 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Shabnam, First woman to be hanged after India's Independence: Know More". Pragativadi (in ஆங்கிலம்). 2021-02-18. 2021-02-18 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரோகா_கொலை_வழக்கு&oldid=3434452" இருந்து மீள்விக்கப்பட்டது