அம்ருதானந்தமயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாதா அம்ருதானந்தமயி
பிறப்பு செப்டம்பர் 27, 1953 (1953-09-27) (அகவை 61)
அமிர்தபுரி, கொல்லம் மாவட்டம், கேரளம், இந்தியா
தேசியம்  இந்தியா
மற்ற பெயர்கள் அம்மா, அம்மாச்சி , அரவணைக்கும் அன்னை,அமிர்தேஸ்வரி
அறியப்படுவது சமூக சேவையாளர், ஆன்மீகவாதி

மாதா அம்ருதானந்தமயி தேவி (பூர்வாசிரமப் பெயர்: சுதாமணி, செப்டம்பர் 27, 1953) ஒரு இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார். இவர் பக்தர்களால் அம்மா மற்றும் "அம்மாச்சி" என்றும் மேலைநாட்டு பக்தர்களால் அரவணைக்கும் அன்னை ("Hugging saint") என்றும் அழைக்கப்படுகிறார். கேரளத்தில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அம்ருதானந்தமயி இன்று மாதா அம்ருதானந்தமயிமடம் அறக்கட்டளை முலம் பரவலாக உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை செய்து செய்கிறார். 2004 சுனாமிக்கு பிறகு இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடி ரூபாய் கணக்கில் உதவி திட்டத்தை உருவாக்கினார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இளமைப் பருவம்[தொகு]

இவர் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் எளிய மீனவ குடும்பத்தைச் சேர்ந்த சுகுனாநந்தன், தமயந்தி தம்பதியினருக்கு 1953, செப்டம்பர் 27, ஆம் நாள் மூன்றாவது மகளாக பிறந்தார். இவருக்கு ஒன்பது வயது ஆகும்போது வீட்டு வேலைகளை செய்யவும், இவரை காட்டிலும் சிறிய சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும், தன்னுடைய மூன்றாம் வகுப்பு தொடக்க கல்வியை பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது.

தரிசனம்[தொகு]

மாதா அமிர்தானந்த மயி தன பக்தர்களை ஒரு தாயைபோல கட்டி அரவணைத்து ஆறுதல் கூறி தரிசனம் தருகிறார்.அவ்வாறு அரவணைக்கும் பொது தன் ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியை பக்தர்கள் பெறுவதாகவும், அதை அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் எனவே அம்மாவின் பக்தர்களும் சீடர்களும் இவரை அரவணைக்கும் அன்னை (Hugging Saint ) என அழைக்கின்றனர்

உலகளாவிய சேவைகள்[தொகு]

அம்ருதானந்தமயி ஆற்றிவருகின்ற சமூக முன்னேற்றப்பணி உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று காட்டுகின்ற வகையில் அவர் உலக சமயத் தலைவர்கள் பலரோடு இணைந்து “அடிமைத்தன ஒழிப்பு அறிக்கை” என்றொரு ஏட்டில் கையெழுத்திட்டார்.[1]

2014, திசம்பர் 2ஆம் நாள் வத்திக்கான் நகரத்தில் உலக சமயத் தலைவர்கள் 11 பேர் கூடிவந்து, அடிமைத் தனம் உலகம் முழுவதிலும் 2020ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்பட முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

திருத்தந்தை பிரான்சிசு உட்பட யூதம், முசுலிம், இந்து சமயம், பவுத்தம் போன்ற பிற சமயங்களைச் சார்ந்த தலைவர்களும் இந்த அறிக்கை வெளியீட்டில் பங்கேற்றனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு:

1) திருத்தந்தை பிரான்சிசு - கத்தோலிக்க கிறித்தவ சமயத்தின் உலகளாவிய தலைவர்
2) மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு - கீழை மரபுவழி திருச்சபையின் உயர் தலைவர் (பிரதிநிதி:மேதகு இம்மானுவேல்)
3) மேதகு ஜஸ்டின் வெல்பி - ஆங்கிலிக்க சபைப் பெருந்தலைவர்; காண்டர்பரி பேராயர்
4) பவுத்த பிக்கு வணக்கத்துக்குரிய திக் நாட் ஹான் (பிரதிநிதி: பவுத்த பிக்குணி வணக்கத்துக்குரிய திக் நூ சான் கோங்) - இசுலாம்
5) அல்-அசார் பெரும் இமாம் முகம்மது அகமது எல்-தாயேப் (பிரதிநிதி:முனைவர் அப்பாஸ் அப்தல்லா அப்பாஸ் சுலைமான்)- இசுலாம்
6) பெரும் அயத்தொல்லா முகம்மது தாக்கி அல்-மொதர்ரேசி - இசுலாம்
7) பெரும் அயத்தொல்லா ஷேக் பஷேர் உசேன் அல் நஜாபி (பிரதிநிதி: ஷேக் நாசியா ரசாஸ் ஜாபர்)- இசுலாம்
8) ஷேக் ஒமார் அபூத் - இசுலாம்
9) அம்மா அமிருதானந்தமயி - இந்து சமயம்
10) வணக்கத்துக்குரிய தாதுக் கிரிண்டே தம்மரத்தன நாயக் மகா தேரோ - மலேசிய பவுத்தத் துறவி
11) முதன்மை ரபி டேவிட் ரோசன் - யூதம்
12) ரபி ஸ்கோர்க்கா - யூதம்

உலகத்தில் பரவலாக நிலவுகின்ற சமூகத் தீமைகளுள் மிகக் கொடியவையாக உள்ள அடிமைத்தனம், மனிதரை விலைபேசுதல், கொத்தடிமை ஊழியம், விபச்சாரத்தில் மனிதர்களை ஈடுபடுத்தல், மனித உடல் உறுப்புகளை வாங்கி விற்றல் இவற்றை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அறிக்கையில் மேற்கூறிய சமயத் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இன்று உலகத்தில் சுமார் 35 மில்லியன் மக்கள் மேற்கூறிய அடிமைத்தனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுதலை கொணர நாட்டுத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் உழைக்க வேண்டும். “மனிதர் அனைவரும் சம மதிப்பு கொண்டவர்கள் என்றும், அடிப்படையான மனித மாண்பு உடையவர்கள் என்றும், சுதந்திர உரிமை பெற்றவர்கள் என்றும் உலக மக்கள் அனைவரும் ஏற்கவேண்டும்.” மனிதர்கள் பிற மனிதர்களால் அடிமைகள் ஆக்கப்படுவது இன்றைய உலகிற்கு “மாபெரும் இழுக்கு” என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.

அம்ருதானந்தமயி பேசுகையில், சிறார் தொழிலில் ஈடுபட்டோரை விடுவிக்கும்போது, அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சமூகத்தில் வேரோட்டமான மாற்றம் கொணர்வதற்காக இவ்வாறு கத்தோலிக்கர், கீழை மரபுவழி சபையினர், ஆங்கிலிக்க சபையினர், யூதர்கள், சூனி மற்றும் ஷியா முசுலிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளும் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து கோரிக்கை விடுப்பது இதுவே முதன்முறை என்று அமைப்பாளர் ஆண்ட்ரூ ஃபோரஸ்டு கூறினார்.[2]

பதவிகள்[தொகு]

அயல் நாட்டில் பணிகள்[தொகு]

1993ல் உலக சமய நாடாளுமன்றத்தின் 100ஆம் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார்.

தலைமையிடம்[தொகு]

இவரின் தலைமை ஆசிரமம் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அமிர்தபுரி என்ற கடலோர கிராமத்தில் அமைந்துள்ளது.

உலக அரங்கில் அம்மாவின் பணிகள்[தொகு]

பாடல்கள் - பஜனைகள்[தொகு]

போதனைகள்[தொகு]

நூல்களும் வெளியீடுகளும்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. அடிமைத்தன ஒழிப்பு பற்றி சமயத் தலைவர்கள் விடுக்கும் கூட்டறிக்கை
  2. அடிமைத்தன ஒழிப்பு அறிக்கை

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அம்ருதானந்தமயி&oldid=1798438" இருந்து மீள்விக்கப்பட்டது