அம்ரித் லால் மீனா
தோற்றம்
அம்ரித் லால் மீனா Amrit Lal Meena | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 2013 – 7 ஆகத்து 2024 | |
| முன்னையவர் | வசந்தி தேவி |
| பின்னவர் | சாந்தா தேவி மீனா |
| தொகுதி | சாலும்பர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 செப்டம்பர் 1959 இலால்புரியா, உதய்பூர் மாவட்டம், இராசத்தான், இந்தியா |
| இறப்பு | 8 ஆகத்து 2024 (அகவை 64) உதய்பூர், இராசத்தான், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
| பணி | விவசாயம் |
| இணையத்தளம் | Amrit Lal Meena profile on Rajassembly |
அம்ரித் லால் மீனா (Amrit Lal Meena) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இராசத்தான் மாநிலத்தில் செயற்பட்டார்.[1][2] உதய்பூர் மாவட்டத்தின் சலும்பர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021ஆம் ஆண்டு சூலை மாதத்தில் போலி மதிப்பெண் பட்டியல் வழக்கு ஒன்றில் மீனா கைது செய்யப்பட்டார்.[3][4]
2024ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8 ஆம் தேதியன்று இராசத்தான் மாநிலத்திலுள்ள உதய்பூரில் தன்னுடைய 64 வயதில் மாரடைப்பால் இறந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan Legislative Assembly". rajassembly.nic.in. Retrieved 6 January 2022.
- ↑ "Salumber Election Result 2018 LIVE: Salumber MLA Election Result & Vote Share - Oneindia" (in en). OneIndia. https://www.oneindia.com/salumber-assembly-elections-rj-156/.
- ↑ "Rajasthan BJP MLA remanded in judicial custody in fake marksheet case" (in en). The Indian Express. 13 July 2021. https://indianexpress.com/article/india/rajasthan-bjp-mla-remand-judicial-custody-fake-marksheet-case-7402613/.
- ↑ Jul 23, TNN /. "Rajasthan high court grants bail to BJP MLA Amritlal Meena | Jodhpur News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/jodhpur/rajasthan-high-court-grants-bail-to-bjp-mla-amritlal-meena/articleshow/84664451.cms.
- ↑ "BJP's three-time tribal MLA in Rajasthan Amrit Lal Meena passes away at 64". The Indian Express (in ஆங்கிலம்). 2024-08-08. Retrieved 2024-08-08.