உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரித் பாரத் விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்
அம்ரித் பாரத் விரைவுத் தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவுத் தொடருந்து
நிகழ்நிலைஇயக்கத்தில் உள்ளது
முதல் சேவைடிசம்பர் 30, 2023 (2023-12-30)
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)10 படுக்கை வசதி பெட்டிகள், 10 முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் & 2 பார்சல் பெட்டிகள்
படுக்கை வசதிஆம்
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை
வேகம்அதிகபட்ச வேகம் மணிக்கு 110 முதல் 130 கிலோமீட்டர்

அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ் (Amrit Bharat Express), இந்திய இரயில்வே மூலம் இயக்கப்படும் குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகள் கொண்ட விரைவுத் தொடருந்து ஆகும். இவ்வகை தொடருந்துகள் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களுக்கிடையே மட்டுமே இயக்கப்படுகிறது. அமருத் பாரத் எக்ஸ்பிரஸ் தொடருந்துகள் 30 டிசம்பர் 2023 முதல் இயக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் அம்ருத் பாரத் தொடருந்து மொத்தம் 22 பெட்டிகளைக் கொண்டது. அதில் 10 குளிர்சாதனமில்லாத படுக்கைப் பெட்டிகளும், 10 பொதுப் பெட்டிகளும், பொதிகளைக் கொண்டுசெல்வதற்கான 2 பெட்டிகளும் அடங்கும்.[1][2] இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 முதல் 130 கிலோமீட்டர் ஆகும்.

சேவைகள்

[தொகு]
வண்டியின் பெயர் வண்டி எண் இயக்குநர் நிறுத்தங்கள் காலம் தூரம் பயண நேரம் வேகம் துவங்கிய நாள் Ref
அதிகபட்ச வேகம் சராசரி வேகம்
தர்பங்கா - ஆனந்தவிகார் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் 15557/15558 கிழக்கு மத்திய இரயில்வே 18 வாரம் இரு முறை 1137 கிமீ 20 மணி 40 நிமிடம் 130 கிமீ 55 கிமீ 30 டிசம்பர் 2023 [3][4]
மால்டா- பெங்களூர் சர் எம். விஸ்வேஷ்வராயா முனையம் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் 13433/13434 கிழ்க்கு இரயில்வே 32 வாராந்திரம் 2272 கிலோமீட்டர் 45மணி 10 நிமிடம் 130 கிமீ 50 கிமீ [3][5]
மும்பை-சகார்சா (பீகார்) அம்ரித் பாரத் விரைவு வண்டி 11015/11016 மத்திய ரயில்வே 22 வாராந்திரம் 1950 கிமீ 35மணி 50 நிமிடம் 130 கிமீ 54 கிமீ 24 ஏப்ரல் 2025 [6][7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ICF set to produce 50 Amrit Bharat sleeper train sets, says Union Railways Minister" (in en-IN). தி இந்து. 10 January 2025. https://www.thehindu.com/news/cities/chennai/icf-set-to-produce-50-amrit-bharat-sleeper-train-sets-says-union-railways-minister/article69084905.ece. "The AB train would be a 22-coach train with two engines on the front and back, which could travel at a speed of 130 kmph." 
  2. "Good News For General Class Train Passengers: 50 New Amrit Bharat Express Coming Soon" (in en). Zee News. https://zeenews.india.com/photos/mobility/good-news-for-general-class-train-passengers-50-new-amrit-bharat-express-coming-soon-2830584/jerk-free-journey-2830589. "Of these 20, 10 are sleeper coaches and 10 are general coaches" 
  3. 3.0 3.1 "PM Modi flags off 2 new Amrit Bharat, 6 Vande Bharat Express trains during Ayodhya visit; check routes & other details". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 December 2023. https://timesofindia.indiatimes.com/business/india-business/pm-narendra-modi-ayodhya-amrit-bharat-vande-bharat-trains-flag-off-full-list-of-new-routes-indian-railways/articleshow/106393567.cms?from=mdr. 
  4. "Darbhanga–Anand Vihar Terminal Amrit Bharat Express". Indiarailinfo. Retrieved 31 December 2023.
  5. "Malda Town–SMVT Bengaluru Amrit Bharat Express". Indiarailinfo. Retrieved 31 December 2023.
  6. "Saharsa to Mumbai 90 Minutes Faster: Bihar's Second Amrit Bharat Express to Cut Travel Time". Times Now (in ஆங்கிலம்). 2025-04-20. Retrieved 2025-04-21.
  7. Ashraf, Zainab (2025-04-21). "Amrit Bharat Express Train Launches New Route: Saharsa To Mumbai In Just 34 Hours". www.oneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2025-04-21.

வெளி இணைப்புகள்

[தொகு]