அம்ரிதா விசுவ வித்யாபீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்ரிதா விசுவ வித்யாபீடம்
अमृत विश्वविद्यापीठम्
Amrita-university.jpg
குறிக்கோளுரைசமக்கிருதம்: श्रद्धावान् लभते ज्ञानम्
சிரத்தவான் லபதே ஞானம்
(பகவத் கீதையிலிருந்து, அத்தியாயம் 4, பாடல் 39)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"ஈடுபாடுள்ளவருக்கு உயர்ந்த ஞானம் கிடைக்கும்."
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2003
வேந்தர்அம்ருதானந்தமயி
துணை வேந்தர்பி. வெங்கட்ரங்கன்
கல்வி பணியாளர்
1,750
மாணவர்கள்18,000
அமைவிடம்கோயம்புத்தூர், இந்தியா
10°54′4″N 76°54′10″E / 10.90111°N 76.90278°E / 10.90111; 76.90278ஆள்கூறுகள்: 10°54′4″N 76°54′10″E / 10.90111°N 76.90278°E / 10.90111; 76.90278
வளாகம்கொல்லம், கோயம்புத்தூர், பெங்களூர், கொச்சி, மைசூர்
இணையதளம்அலுவல்முறை வாயில்

அம்ரிதா விசுவ வித்யாபீடம் ( Amrita Vishwa Vidyapeetham) அல்லது அம்ரிதா பல்கலைக்கழகம் கேரளம், தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலங்களில் பரந்துள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமையகம் கோவை நகரிலிருந்து ஏறத்தாழ 22 கி.மீ தொலைவிலுள்ள எட்டிமடையில் அமைந்துள்ளது.

2011இல் நோபல் பரிசு பெற்ற லேலாண்டு எச். ஆர்ட்வெல் அம்ரிதா பல்கலைகழத்தில் கூடுதல் ஆசிரியராக சேர்ந்துள்ளார்.[1] இந்தப் பல்கலைக்கழகத்தில் கணினியியல், பொறியியல், வணிகத்துறை, உயிரித் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், ஆயுர்வேதம், மருத்துவம், செவிலியம், மருந்தாள்மை, பல் மருத்துவம், சமூகப்பணி, தொடர்பியல், கல்வி, மற்றும் அடிப்படை அறிவியல் துறைகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மருத்துவ தகவல் தொழினுட்பம், கணிமைப் பொறியியல், இணையவெளிப் பாதுகாப்பு, பிணிசார் ஆய்வு, புற்றுநோயியல் போன்ற சிறப்புக் கல்வி திட்டங்களும் இந்தியாவின் தேசிய மேம்பாட்டு திட்டங்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நூறு பட்டத் திட்டங்களில் 18,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

நிர்வாகம்[தொகு]

இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அம்ருதானந்தமயி உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)வில் பணியாற்றியுள்ள கணிணிப் பொறியியலாளர் வெங்கட்ரங்கன் துணை வேந்தராக உள்ளார்.

வரலாறு[தொகு]

இரண்டு வளாகங்கள், அமிர்தபுரியிலும் எட்டிமடையிலும், கணினி பயிற்சி மையங்களாகத் துவக்கப்பட்டு பின்னர் அம்ரிதா தொழினுட்பக் கழகம் என்ற பெயரில் கல்லூரிகளாக மேம்படுத்தப்பட்டன. கொல்லத்திலுள்ள அமிர்தாபுரியில் உள்ள கல்லூரி கேரளப் பல்கலைக்கழகத்துடனும் எட்டிமடை வளாகத்திலுள்ள கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டன. 2002இல் அம்ரிதா விசுவ வித்யாபீடம் துவக்கப்பட்டபோது இவை அம்ரிதா பொறியியல் பள்ளி என மீளவும் துவக்கப்பட்டன.

வளாகங்கள்[தொகு]

அம்ரிதா பொறியியல் பள்ளி, கோவை
அம்ரிதபுரி வளாகம்

அம்ரிதா விசுவ வித்யாபீடம் ஐந்து வளாகங்களில் இயங்குகின்றது. இதன் தலைமையகம் கோவையின் எட்டிமடையில் உள்ளது. மற்ற நான்கு வளாகங்கள் கேரளத்தில் அமிர்தபுரி, கொச்சியிலும் கருநாடகத்தில் பெங்களூர், மைசூரிலும் உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Nobel laureate joins Amrita University as faculty". India Education Review. 3 November 2011. http://www.indiaeducationreview.com/news/nobel-laureate-joins-amrita-university-faculty. பார்த்த நாள்: 30 December 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]