உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரிதா புரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரிதா புரி
2012இல் ஒரு விருது நைகச்சியில் அம்ரிதா புரி
பிறப்பு20 ஆகத்து 1983 (1983-08-20) (அகவை 41)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இம்ருன் சேதி (தி. 2017)

அம்ரிதா புரி (Amrita Puri; பிறப்பு 20 ஆகத்து 1983) ஓர் இந்திய நடிகையாவார். சிறந்த பெண் திரைப்பட அறிமுகம் , சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் பரிந்துரைகளைப் பெற்ற ஆயிஷா (2010) என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படம் மூலம் இவர் திரைப்படங்களுக்கு அறிமுகமானார். மூன்று வருடங்கள் கழித்து கை போ சே! (2013) மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார்.

தொழில்

[தொகு]

தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, அம்ரிதா பூரி நாடகங்களை எழுதியும், நடிக்கவும் தொடங்கினார். குவாசர் தாகூர் பதம்சீயின் ரீட்டெல்லிங்ஸ் வியூ ஃப்ரம் தி ஸ்டேஜ் என்ற ஆங்கில நாடகம் இவரது முதல் நாடகமாகும்.[1] ஓகில்வி என்ற விளம்பர நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு இவர் வாழ்க்கைமுறை இதழுக்கான சுயாதீனமாக சேர்ந்து நகல் எழுதினார்.[2] திலீப் பாட்டியா இவரது சுயவிவரத்தை ஏற்ற்க் கொண்ட பிறகு, இவர் திரைப்படங்களிலும் விளம்பர படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். விரைவில் இவர் கோடெக்ஸுக்காக தனது முதல் விளம்பரத்தை செய்தார். பின்னர் பீப்பிள் ஃபர்ஸ்ட், கார்னியர் , லோரியல் உட்பட பல பொருட்களுக்கான விளம்பரங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்தார்.[1][3]

பாலிவுட் அறிமுகம் (2010-13)

[தொகு]

பல படங்களில் நடிக்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பிறகு, ராஜ்ஸ்ரீ ஓஜாவின் ஆயிஷா (2010) படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். சோனம் கபூர், அபய் தியோல், ஈரா துபே, சைரஸ் சாஹுகர், ஆனந்த் திவாரி, அருணோதய் சிங், லிசா ஹேடன் ஆகியோர் இணைந்து நடித்த காதல் நகைச்சுவையான இப்படம், கபூரின் பெயரிடப்பட்ட கதாநாயகியின் நண்பரான ஷெஃபாலி தாக்கூரை இவர் சித்தரித்திருந்தார். படமும் இவரது நடிப்பு, பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் 28.65 கோடி (US $ 4.1 மில்லியன்) செலவில் படமாக்கப்பட்ட இதன் உலகளாவிய வருமானம் 19 கோடியாகவே (US $ 2.7 மில்லியன்) இருந்தது. படம் அரை வெற்றி பெற்றது பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூலையே ஈட்டியது. ஆனால் 56 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த பெண் அறிமுகதிற்காகவும் சிறந்த துணை நடிகைக்காவும் என பூரி 2 பரிந்துரைகளைப் பெற்றார்.

ஆயிஷாவின் மிதமான வெற்றிக்குப் பிறகு, விஷால் மகாத்கர் இயக்குனராக அறிமுகமான பிளட் மணி(2012) என்ற படட்த்தில் குனால் கேமுவுக்கு இணையாக நடித்தார். இவர் கேமு கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்திருந்தார். திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான பதிலைப் பெற்றது. மேலும் 90 பில்லியன் செலவில் எடுக்கப்பட்ட (US $ 1.3 மில்லியன்) படத்தின் வசூல் உலகளாவிய வசூல் 120 மில்லியன் யூரோக்களாஅக (US $ 1.7 மில்லியன்) இருந்தது. இதனால் "சராசரிக்குக் குறைவான வசூல்" திரைப்படமானது. பூரி அடுத்து அபிஷேக் கபூரின் கை போ சேவில் ! (2013) சுசாந்த் சிங் ராஜ்புத், அமித் சாத், ராஜ்கும்மர் ராவ் ஆகியோருடன் தோன்றினார். இப்படம் 'என் வாழ்க்கையின் 3 தவறுகள்' என்ற புதினத்தின் தழுவலாகும். இவர் தனது சிறந்த நண்பரை காதலிக்கும் மாவட்ட அளவிலான துடுப்பாட்ட வீரரின் தங்கை வித்யா பட் என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன மற்றும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்று 900 மில்லியன் (US$11 மில்லியன்) உலகளாவிய வருமானத்தை ஈட்டியது.

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் எச்டிஎப்சி வங்கியின் முதன்மை செயல் அலுவலர் ஆதித்யா பூரியின் மகளாவார். இவர் மும்பையைச் சேர்ந்த இம்ரூன் சேதியை மணந்தார்.[4]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "My Character Has Been Fleshed Out Much More Than In Emma". RealBollywood.com. 5 August 2010. Archived from the original on 6 August 2010. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
  2. "Abhay is a fab co-star: Amrita Puri". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 July 2010. Archived from the original on 9 June 2012. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "It's raining newcomers in Bollywood". India Tribune. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
  4. "Inside Amrita Puri And Imrun Sethi's Bangkok Wedding". NDTV.com.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amrita Puri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரிதா_புரி&oldid=3946435" இலிருந்து மீள்விக்கப்பட்டது