உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரிதா காக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரிதா காக்
இயற்பெயர்அம்ரிதா காக்
பிறப்பு19 மார்ச்சு 1985 (1985-03-19) (அகவை 41)
மும்பை, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி, இந்திய பாப்
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)பாடகர்
இசைத்துறையில்2005–2022
இணையதளம்www.instagram.com/amritakak

அம்ரிதா காக் (Amrita Kak) என்பவர் பல பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஒரு பாலிவுட் பாடகி ஆவார். இவர் இந்திய அரசியல்வாதியான பீனா காக்-கின் மகளாவார். மேலும் தொழிலதிபரான ரிஜூ ஜூன்ஜூன்வாலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டவர் [1]. இவரைத் திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் சல்மான் கான் ஆவார். இவர்களுக்கிடையேயான நெருக்கத்தின் காரணமாக, இவர் சல்மான் கானின் ரக்சா பந்தன் சகோதரியாக அழைக்கப்படுகிறார்.[2] இவர் தனது பெரும்பாலான பாடல்களை அவருடைய திரைப்படங்களுக்காகவும் பாடியிருக்கிறார். இவர் தனது சொந்த பாடல் வடிவமைப்பு நிறுவனமான "அம்ரிதா தி லேபிள்"-ஐத் தொடங்கியுள்ளார்.[3]

தொழில்

[தொகு]

மைனே பியார் கியுன் கியா? திரைப்படத்திலிருந்து "ஜஸ்ட் சில்", ரெடி திரைப்படத்திலிருந்து "கேரக்டர் தீலா", பாடிகார்ட் திரைப்படத்திலிருந்து "தேசி பீட்" — போன்ற குறிப்பிட்டப் பிரபலமானப் பாடல்களைப் பாடியவர் இவரே ஆவார்.[4][5][6][7] இவர் இந்தியச் செவ்வியல் இசையிலும் பயிற்சி பெற்றுள்ளார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அம்ரிதாவின் தாய், இந்திய அரசியல்வாதியான பீனா காக் ஆவார்.[9][10] இவருக்கு அன்குர் காக் என்ற ஒரு சகோதரரும், இந்திய நடிகர் சல்மான் கான் என்ற ஒரு ராக்கிச் சகோதரரும் உள்ளனர். சல்மான் கான் இவருடைய வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.[11][12] அம்ரிதா, 2010-ஆம் ஆண்டு மே 29 அன்று ரிஜூ ஜூன்ஜூன்வாலாவை மணந்தார்.[13]

படத்தொகுப்பு

[தொகு]
பாடல் திரைப்படம் ஆண்டு வெளியானது மொழி கூடுதல் தகவல்
"ஜஸ்ட் சில்" மைனே பியார் கியுன் கியா? 2005 இந்தி
"ஜஸ்ட் சில்" (ரீமிக்ஸ்)
"அன்க் விச் செஹ்ரா பியார் டா" அப்னே 2007
"அன்க் விச் செஹ்ரா பியார் டா" (ரீமிக்ஸ்)
"துஜே அக்சா பீச் குமா டூன்" காட் டுஸ்ஸி கிரேட் ஹோ 2008
"துஜே அக்சா பீச் குமா டூன்" (ரீமிக்ஸ்)
"லவ் மீ லவ் மீ" வான்டட் 2009
"லவ் மீ லவ் மீ"(அம்மா அப்பா கலவை)
"கேரக்டர் டீலா" ரெடி 2011 [14]
"திங்கா சிக்கா"
"தேசி பீட்" பாடிகார்ட் (2011 ஹிந்தி படம்)|
"தேசி பீட்" (ரீமிக்ஸ்)
"தேசி பீட்" (பஞ்சாபி ஹிப்-பாப் மிக்ஸ்)
"உமீத்" டேஞ்சரஸ் இஷ்க் 2012 [7]
"ஓ ரஞ்சனா" மூட்ஸ் வித் மெலடி 2022

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ex-minister Bina Kak celebrated her 60th birthday grandly in Delhi". The Times of India. 28 February 2014.
  2. Kamra, Diksha (1 June 2011). "Salman's treat me like a sister". The Times of India.
  3. url=https://amritathelabel.com/ பரணிடப்பட்டது 2023-03-26 at the வந்தவழி இயந்திரம்
  4. "Review: Bodyguard music is average". Rediff. 29 July 2011.
  5. "Singer Amrita Kak is just chilling at the moment". DNA. 4 May 2011.
  6. Shukla, Richa (24 October 2013). "Amrita Kak Jhunjhunwala performs at Sufi festival". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Amrita-Kak-Jhunjhunwala-singer-Just-Chill-Chill-Maine-Pyar-Kyun-Kiya-Nusrat-Fateh-Ali-Khan/articleshow/24604442.cms.
  7. 1 2 "Dangerous Ishq: Music Review". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/music-reviews/Dangerous-Ishq-Music-Review/articleshow/12838126.cms.
  8. Vijayakar, Rajiv (1 July 2011). "Style & substance". The Indian Express.
  9. "मंत्री की ये बेटी है सलमान की मुंहबोली बहन, बिजनेसमैन से कराई थी शादी" (in hi). Dainik Bhaskar. https://www.bhaskar.com/rajasthan/jodhpur/news/RAJ-JOD-HMU-about-amrita-kak-on-rakshabandhan-5664194-PHO.html.
  10. "राजनेता और बॉलीवुड अभिनेत्री बीना काक का आज है हैप्पी बर्थडे" (in hi-IN). www.patrika.com. https://www.patrika.com/news/today-special/happy-birthday-to-congress-leader-and-bollywood-actress-bina-kak-1175032.
  11. "I am too shy to perform on stage: Amrita Kak". The Indian Express (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2018-03-03.
  12. "All in the family" (in en-IN). The Hindu. 2011-06-20. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/all-in-the-family/article2118905.ece.
  13. "A grand wedding reception!". The Times of India. 3 June 2010. Retrieved 23 February 2018.
  14. "Music Review- Ready". Hindustan Times. 30 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரிதா_காக்&oldid=4564604" இலிருந்து மீள்விக்கப்பட்டது