உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரிதா இராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரிதா இராம்
பிறப்புஅம்ரிதா
தேசியம்இந்தியன்
பணிதொழில் முனைவு, ஆடை வடிவமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ராம்ஜி (நடிகர்)

அம்ரிதா இராம் (Amritha Ram) என்பவர் ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் தொழில்முனைவோரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

தொழில்

[தொகு]

2000களின் முற்பகுதியில், பாலிமர் தொலைக்காட்சியில் என் ஸ்டைல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி, தொகுத்து வழங்கும் வாய்ப்புகளைப் பெறுவதற்கு முன்பு, அமிர்தா சென்னையில் ஒரு தகுநய, ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.[2][3] அம்ரிதா நியூயார்க்கில் உள்ள புதுப்பானி தொழில்நுட்ப நிறுவனத்தில், புதுப்பாணி மற்றும் வடிவமைப்பு கல்வியினைக் கற்கச் சென்றார். நியூயார்க்கிலிருந்து திரும்பியதும் தென்னிந்தியத் திரைப்படத் துறையில் மீண்டும் பணியாற்றத் தொடங்கினார். இவரது முதல் படம் முகமூடி (2012) ஆகும். இதனை மிஷ்கின் இயக்கியிருந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் தொடர்ந்து பணியாற்றினார். குறிப்பாக த/பெ சத்யமூர்த்தி (2015), ஸ்கெட்ச் (2018) ஆகியவற்றில் பணியாற்றினார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் அமெரிக்க இசை நிகழ்ச்சி சுற்றுப்பயணத்திற்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.[4][5] இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களில் ஒன்று வெற்றிமாறனின் வட சென்னை ஆகும். இது 1977 முதல் 2007 வரை வட சென்னையின் பாதாள உலக அரசியலைத் தொடர்ந்து, வெவ்வேறு காலகட்டங்களுக்குத் தேவையான வெவ்வேறு உடைகளுடன் வெளிவந்தது.[6][7]

2010களின் பிற்பகுதியில், பொது நிகழ்ச்சிகளுக்கான ஆடைகளில் கமல்ஹாசனுடன் பணியாற்றினார். குறிப்பிடத்தக்க வகையில், பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சித் தொடரான விஸ்வரூபம் 2 (2018)-இன் விளம்பரங்களுக்காகவும், இந்தியன் 2 (2021)-இல் இவருடைய கதாபாத்திரத்திற்காகவும் நடிகரின் ஆடைகளை வடிவமைத்தார்.[8][9][10]

அமிர்தா சோய்க்னே என்ற பெயரில் ஓர் ஆடை அலங்காரக் கடை வைத்திருக்கிறார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அம்ரிதா நடிகரும் நடன இயக்குநருமான ராம்ஜியை மணந்தார். இவர் அவரது நடனப் பள்ளிகளுக்கான வேலைகளை இணைந்து நிர்வகிக்கிறார்.

பிப்ரவரி 2020-இல் இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் அம்ரிதா மயிரிழையில் உயிர் தப்பினார்.[12][13][14][15]

குறிப்பிடத்தக்க திரைப்படவியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. S, Srivatsan (May 27, 2020). "This Instagram page catalogues Kamal Haasan's movie looks with some help from the actor" via www.thehindu.com.
  2. "The woman behind the star". The New Indian Express. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Learn the secrets of style divas". The New Indian Express. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Costume designer Amritha Ram to work in Vikram's next with Vijay Chander". Behindwoods. January 28, 2017.
  5. "Amrita Ram Interview: "I will be dressing up all the actors in Vada Chennai"". Only Kollywood. July 14, 2016.
  6. "Clothes will indicate passage of time in Vada Chennai, says Amritha Ram". August 15, 2016.
  7. "KHHK by couturier Amritha Ram finally finds a home in Collage, Chennai!". www.indulgexpress.com (in ஆங்கிலம்). Retrieved 2023-06-20.
  8. "Meet the stylist behind Kamal Haasan's stunning looks in Bigg Boss Tamil 3". The New Indian Express.
  9. "Stylist Spotlight: Meet Amritha Ram who curates looks for legendary Kamal Haasan for Bigg Boss 4 Tamil". Bollywood Hungama. October 14, 2020.
  10. "Amritha Ram on styling Kamal Haasan for 'Bigg Boss 4 Tamil': It was a collaborative, interactive process". Deccan Herald. October 5, 2020.
  11. "Street Fashion | Budget Shopping by Amritha Ram at Pondicherry – travel".
  12. "Indian 2: Costume designer Amritha Ram reveals how Kamal Haasan, Kajal Aggarwal and she had a 'providential escape'". Hindustan Times. February 20, 2020.
  13. Janani K. (February 20, 2020). "Costume designer Amritha Ram on Indian 2 accident: Kamal Haasan, Kajal and I had a narrow escape". India Today.
  14. "Costume designer Amritha, who was on 'Indian 2' sets, recalls narrow escape". The News Minute. February 20, 2020.
  15. "Khaddar varsity jackets? Yes, please". telegraphindia. Retrieved 18 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரிதா_இராம்&oldid=4376218" இலிருந்து மீள்விக்கப்பட்டது