அம்மோனியம் வலேரேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அசானியம்;பெண்டனோயேட்டு
| |
| வேறு பெயர்கள்
பெண்டனோயுக்கு அமில அமோனியம் உப்பு
| |
| இனங்காட்டிகள் | |
| 42739-38-8 | |
| ChemSpider | 142697 |
| EC number | 227-767-6 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 162525 |
| |
| UNII | 0U3170A41K |
| பண்புகள் | |
| C5H13NO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 119.16 g·mol−1 |
| தோற்றம் | வெண் படிகங்கள் |
| உருகுநிலை | 108 °செல்சியசு |
| கரையும் | |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 107.4 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அம்மோனியம் வலேரேட்டு (Ammonium valerate) என்பது CH3(CH2)3COONH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] வலேரிக் அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3]
தயாரிப்பு
[தொகு]வலேரிக்கு அமிலத்துடன் அம்மோனியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் வலேரேட்டு உருவாகும்.
இயற்பியல் பண்புகள்
[தொகு]அம்மோனியம் வலேரேட்டு தண்ணீர் மற்றும் ஆல்ககாலில் மிக எளிதாகக் கரையும். மேலும் ஈதரிலும் நன்றாகக் கரையும். வலேரிக்கு அமிலத்தின் சிறப்பியல்பு மணத்தையும் கூர்மையான, இனிப்புச் சுவையையும் கொண்டுள்ளது.[4]
பயன்கள்
[தொகு]உணவுத் தொழிலில் ஒரு சுவையூட்டும் முகவராகவும், வேதியியல் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் அம்மோனியம் வலேரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[5]
கடந்த காலத்தில் நரம்பு கோளாறுகளுக்கு எதிராக அமைதிப்படுத்தும் பண்புகளைக் கொண்ட ஒரு மயக்க மருந்தாக அம்மோனியம் வலேரேட்டு பயன்படுத்தப்பட்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammonium Valerate | The Merck Index Online". merckindex.rsc.org. Retrieved 21 March 2025.
- ↑ "Compound: AMMONIUM VALERATE (CHEMBL2106510)". ebi.ac.uk. Retrieved 21 March 2025.
- ↑ "NCATS Inxight Drugs — AMMONIUM VALERATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. Retrieved 21 March 2025.
- ↑ The National Formulary of Unofficial Preparations (in ஆங்கிலம்). The American PharmaceuticalAssociation. 1942. p. 29. Retrieved 21 March 2025.
- ↑ "AMMONIUM VALERATE" (in ஆங்கிலம்). Canyon Components. Retrieved 21 March 2025.
- ↑ Stedman, Thomas (1 January 1920). Stedman's Medical Dictionary (in ஆங்கிலம்). Dalcassian Publishing Company. p. 309. Retrieved 21 March 2025.