அம்மோனியம் மெட்டாவனேடேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் மூவாக்சோவனெடேட்டு(V) | |
| வேறு பெயர்கள்
அம்மோனியம் வனேடேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 7803-55-6 | |
| ChemSpider | 19968892 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 516859 |
| வே.ந.வி.ப எண் | YWD875000 |
| |
| UNII | FL85PX638G |
| UN number | 2859 |
| பண்புகள் | |
| NH4VO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 116.98 கி/மோல் |
| தோற்றம் | வெண்மை |
| அடர்த்தி | 2.326 கி/செ.மீ3 |
| உருகுநிலை | >200 °C (392 °F; 473 K)[1] (சிதைவடையும்) |
| 4.8 கி/100 மி.லி (20 °செல்சியசு)[1] | |
| கரைதிறன் | எத்தனாலமீன், ஈரெத்தினாலமீனில் கரையும், |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
சாத்தியமுள்ள சடுதிமாற்றி , சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H301, H332, H340, H361, H370, H372, H412 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P281, P301+310, P304+312, P304+340, P307+311, P308+313 |
| தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
58.1 மி.கி/கி.கி, வாய்வழி (எலி) |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | அம்மோனியம் ஆர்த்தோவனேடேட்டு அம்மோனியம் எக்சாவனேடேட்டு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் மெட்டாவனேடேட்டு பொட்டாசியம் மெட்டா வனேடேட்டு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அம்மோனியம் மெட்டாவனேடேட்டு (Ammonium metavanadate) என்பது NH4VO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு வெள்ளை உப்பாக, இருப்பினும் மாதிரிகள் பெரும்பாலும் V2O5 சேர்மத்தின் அசுத்தங்கள் காரணமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். வனேடியத்தை சுத்திகரிப்பதில் அம்மோனியம் மெட்டாவனேடேட்டு ஒரு முக்கியமான இடைநிலைப் வேதிப் பொருளாகும்.[2]
தயாரிப்பு
[தொகு]சூடான சோடியம் கார்பனேட்டு போன்ற கார கரைசல்களில் V2O5 கரைவதால் உருவாகும் வனேடேட்டு அயனிகளின் கரைசல்களில் அம்மோனியம் உப்புகளைச் சேர்ப்பதன் மூலம் அம்மோனியம் மெட்டாவனேடேட்டு சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இந்த சேர்மம் நிறமற்ற திடப்பொருளாக வீழ்படிவாகிறது.[3][4] வீழ்படிவாக்கல் படி மெதுவாக நிகழும்.
கட்டமைப்பு
[தொகு]அம்மோனியம் மெட்டாவனேடேட்டு சேர்மம் மூலை-பகிர்வு VO4 நான்முகியால் உருவாக்கப்பட்ட [VO3]− சங்கிலிகளைக் கொண்ட பல்படி கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இந்தச் சங்கிலிகள் அம்மோனியம் அயனிகளுடன் ஐதரசன் பிணைப்புகள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.[5]
| பந்து குச்சி மாதிரி | பன்முக மாதிரி | [(VO3)n]n− சங்கிலிகள் |
பயன்கள்
[தொகு]அம்மோனியம் மெட்டாவனடேட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீழ்படிவாக்கத்தின் மூலம் வனேடியம் பெரும்பாலும் கசடுகள் மற்றும் தாதுக்களின் நீர் சாற்றில் இருந்து சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் வனேடியம் பெண்டாக்சைடைக் கொடுக்க இச்சேர்மம் வறுக்கப்படுகிறது:[2]
- 2 NH4VO3 → V2O5 + 2 NH3 + H2O
பிற பண்புகள்
[தொகு]வனேடேட்டுகள் பாசுப்பேட்டுகளின் கட்டமைப்பு பிரதிபலிப்புகளாக செயல்பட முடியும், மேலும் இந்த வழியில் அவை உயிரியல் செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99th ed.). CRC Press. pp. 4–40. ISBN 978-1138561632.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - 1 2 Günter Bauer, Volker Güther, Hans Hess, Andreas Otto, Oskar Roidl, Heinz Roller, Siegfried Sattelberger "Vanadium and Vanadium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a27_367
- ↑ G. Brauer "Ammonium Metavanadate" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 1272.
- ↑ Robert H. Baker, Harry Zimmerman, R. N. Maxson "Ammonium Metavanadate" Inorganic Syntheses, 1950, Vol. 3, 117-118. எஆசு:10.1002/9780470132340.ch30
- ↑ Vladimír Syneček and František Hanic (1954). "The crystal structure of ammonium metavanadate". Czechoslovak Journal of Physics 4 (2): 120–129. doi:10.1007/BF01687750. Bibcode: 1954CzJPh...4..120S.
- ↑ Korbecki, Jan; Baranowska-Bosiacka, Irena; Gutowska, Izabela; Chlubek, Dariusz "Biochemical and medical importance of vanadium compounds" Acta Biochimica Polonica 2012, vol. 59, pp. 195-200.
- ↑ Crans, D. C.; Chatterjee, P. B. "Vanadium Biochemistry" Reedijk, Jan; Poeppelmeier, Kenneth, Eds. Comprehensive Inorganic Chemistry II (2013), 3, 323-342. எஆசு:10.1016/B978-0-08-097774-4.00324-7