அம்மோனியம் பெர்புரோமேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
அசேனியம் பெர்புரோமேட்டு | |
| வேறு பெயர்கள்
அம்மோனியம் பெர்புரோமேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 28037-93-6 | |
| ChemSpider | 13687751 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 23293222 |
| |
| பண்புகள் | |
| NH4BrO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 161.94 கி/மோல் |
| கரையும் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அம்மோனியம் பெர்புரோமேட்டு (Ammonium perbromate) என்பது NH4BrO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். அம்மோனியம் பெர்குளோரேட்டுடன் ஒத்த பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறது ஆனால் இதை தனிமைப்படுத்துவது கணிசமாக மிகவும் கடினமாகும். மேலும் சிதைவடைவதில் சிக்கலான வழிமுறையைக் கொண்டுள்ளது.[1][2][3]
பண்புகள்
[தொகு]அம்மோனியம் பெர்புரோமேட்சு அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும். அம்மோனியம் பெர்குளோரேட்டைப் போன்ற கரைதிறன்களையும் கொண்டிருக்கிறது. அம்மோனியம் பெர்குளோரேட்டுடன் ஒப்பிடுகையில் அம்மோனியம் பெர்புரோமேட்டு மிகக் குறைவான நீருறிஞ்சும் தன்மையைப் பெற்றுள்ளது. அதிக ஈரப்பதம் உள்ள வளிமண்டலத்தில் பராமரிக்கப்படும் போது எடை அதிகரிப்பை காட்டுகிறது.[2]
அம்மோனியம் பெர்புரோமேட்டு 170 மற்றும் 180 பாகை செல்சியசுக்கு இடைப்பட்ட வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்குகிறது. மேலும் சில சமயங்களில் வெடிப்பதையும் அவதானிக்க முடிந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hull, Katherine L.; Cairns, Amy J.; Haq, Marium (19 February 2019). "Bromate Oxidation of Ammonium Salts: In Situ Acid Formation for Reservoir Stimulation". Inorganic Chemistry 58 (5): 3007–3014. doi:10.1021/acs.inorgchem.8b02891. பப்மெட்:30777427. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.8b02891. பார்த்த நாள்: 31 August 2024.
- 1 2 3 Keith, James N.; Solomon, Irving J. (16 May 1969). "Ammonium Perbromate". Inorganic Chemistry 9 (6): 1560–1561. doi:10.1021/ic50088a051. https://pubs.acs.org/doi/10.1021/ic50088a051. பார்த்த நாள்: 31 August 2024.
- ↑ Pisarenko, Aleksey N.; Young, Robert; Quiñones, Oscar; Vanderford, Brett J.; Mawhinney, Douglas B. (22 July 2011). "Two New Methods of Synthesis for the Perbromate Ion: Chemistry and Determination by LC-MS/MS". Inorganic Chemistry 50 (18): 8691–8693. doi:10.1021/ic201329q. பப்மெட்:21780765. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic201329q. பார்த்த நாள்: 31 August 2024.