உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு
Ammonium neodymium nitrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டையசானியம்;நியோடிமியம்(3+);பெண்டாநைட்ரேட்டு
வேறு பெயர்கள்
ஈரம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு, ஈரம்மோனியம் நியோடிமியம் பெண்டாநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
15653-40-4 Y
ChemSpider 21160394
EC number 239-721-2
InChI
  • InChI=1S/5NO3.2H3N.Nd/c5*2-1(3)4;;;/h;;;;;2*1H3;/q5*-1;;;+3/p+2
    Key: GHPKFTYZEPZTAF-UHFFFAOYSA-P
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 57370190
  • [NH4+].[NH4+].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Nd+3]
  • [NH4+].[NH4+].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Nd+3].O.O.O.O
பண்புகள்
H8N7NdO15
வாய்ப்பாட்டு எடை 490.34 g·mol−1
தோற்றம் செவ்வூதா படிகங்கள் (நீரேற்று)
கரையும்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு (Ammonium neodymium nitrate) என்பது Nd(NH4)2(NO3)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] இந்தச் சேர்மம் நைட்ரேட்டு குழுவைச் சேர்ந்த ஓர் அருமண் உலோக உப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[4]

தயாரிப்பு

[தொகு]

நியோடிமியம் ஆக்சைடு, நைட்ரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து வினைக்கு உட்படுத்தினால் அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு உருவாகும்.[5]

மேலும், நியோடிமியம் ஆக்சைடு அல்லது நியோடிமியம் கார்பனேட்டை அம்மோனியம் நைட்ரேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் துணை விளைபொருளாக தண்ணீரை வெளியிட்டு அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு உருவாகிறது:[4]

Nd2O3 + 6NH4NO3 -> 2(NH4)2Nd(NO3)5 + 3H2O

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு தண்ணிரில் கரையும்.

இந்தச் சேர்மம் Nd(NH4)2(NO3)5 • 4H2O—சிவப்பு-ஊதா நிறப் படிகங்களின் கலவை கொண்ட ஒரு நீரேற்றை உருவாக்குகிறது. 47 °செல்சியசு வெப்பநிலையில் சொந்த படிகமயமாக்கல் நீரில் இது உருகும்.

வேதிப் பண்புகள்

[தொகு]

இந்தச் சேர்மம் வலுவான அமிலங்களுடன் வினைபுரிந்து கரையக்கூடிய சேர்மங்களை உருவாக்குகிறது. சிதைக்கப்படும்போது நைட்ரசன் ஆக்சைடுகளை வெளியிடும்.[4]

பயன்கள்

[தொகு]

அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு பல நியோடிமியம் சேர்மங்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. பல்வேறு வேதியியல் வினைகளுக்கு ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Einecs (European Inventory of Existing Commercial Chemical Substances) (in ஆங்கிலம்). Office for Official Publications of the European Communities. 1990. p. 545. Retrieved 10 March 2025.
  2. ↑ "diammonium neodymium pentanitrate" (in ஆங்கிலம்). chemsrc.com. Retrieved 10 March 2025.
  3. ↑ "CAS 15653-40-4 Diammonium neodymium pentanitrate - Alfa Chemistry". alfa-chemistry.com. Retrieved 10 March 2025.
  4. 1 2 3 "Buy Diammonium neodymium pentanitrate (EVT-13870826)". evitachem.com. Retrieved 11 March 2025.
  5. 1 2 "Buy Diammonium neodymium pentanitrate | | BenchChem" (in ஆங்கிலம்). benchchem.com. Retrieved 11 March 2025.