உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மோனியம் அலுமினியம் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மோனியம் அலுமினியம் சல்பேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அம்மோனியம் ஆலம்
செர்மிகைட்டு
இனங்காட்டிகள்
7784-25-0 Y
7784-26-1 (டோடெக்காஐதரேட்டு) Y
ChemSpider 2297489 Y
56419 (டோடெக்காஐதரேட்டு) Y
EC number 232-055-3 616-522-2 (டோடெக்காஐதரேட்டு)
InChI
  • InChI=1S/Al.H3N.2H2O4S/c;;2*1-5(2,3)4/h;1H3;2*(H2,1,2,3,4)/q+3;;;/p-3 Y
    Key: LCQXXBOSCBRNNT-UHFFFAOYSA-K Y
  • InChI=1/Al.H3N.2H2O4S/c;;2*1-5(2,3)4/h;1H3;2*(H2,1,2,3,4)/q+3;;;/p-3
    Key: LCQXXBOSCBRNNT-DFZHHIFOAY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D02842 (டோடெக்காஐதரேட்டு)
பப்கெம் 3032540
62668 (டோடெக்காஐதரேட்டு)
வே.ந.வி.ப எண் WS5640010
  • [Al+3].[O-]S(=O)(=O)[O-].[O-]S([O-])(=O)=O.[NH4+]
UNII DPU64XYB1D
5C36DRL9ZN (டோடெக்காஐதரேட்டு)
பண்புகள்
(NH4)Al(SO4)2
வாய்ப்பாட்டு எடை 237.15 கி/மோல் (நீரற்ற சேர்மம்)
453.33 g/mol (டோடெக்காஐதரேட்டு)
தோற்றம் வெண்ணிறப் படிகங்கள்
அடர்த்தி 2.45 கி/செமீ3 (நீரற்ற சேர்மம்)
1.64 கி/செமீ3 (டோடெக்காஐதரேட்டு)
உருகுநிலை 93.5 °C (200.3 °F; 366.6 K) (டோடெக்காஐதரேட்டு)
கொதிநிலை 120 °C (248 °F; 393 K) dehydr. (டோடெக்காஐதரேட்டு)
15 கி/100 மிலி (20 °செ, டோடெக்காஐதரேட்டு)
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுமுகி (நீரற்ற சேர்மம்)
கன சதுரம் (டோடெக்காஐதரேட்டு)
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகி (Al3+)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms Skin Irrit. 2; Eye Irrit. 2
GHS signal word எச்சரிக்கை
H315, H319
P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில்-தீப்பற்றாதது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அம்மோனியம் அலுமினியம் சல்பேட்டு (Ammonium Aluminium sulfate) அம்மோனியம் ஆலம் அல்லது ஆலம் என்றும் அழைக்கப்படுகிறது ("படிகாரம்" என்றும் அழைக்கப்படும் பல வேறுபட்ட பொருட்கள் இருந்தாலும்), இது ஒரு வெண்மை நிற படிக இரட்டை சல்பேட்டு ஆகும். இது பொதுவாக (NH4)Al(SO4)2·12H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் டோடெக்காஐதரேட்டாகவே கருதப்படுகிறது. இது பல்வேறு முக்கிய பயன்பாடுகளில் சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. டோடெகாஐதரேட்டு வடிவமானது இயற்கையாகவே செர்மிகைட்டு என்ற அரிதான கனிமமாக காணப்படுகிறது.

தயாரிப்பு மற்றும் அடிப்படை பண்புகள்

[தொகு]

அம்மோனியம் ஆலமானது அலுமினிய ஐதராக்சைடு, சல்பூரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் சல்பேட்டு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பொட்டாசியம் ஆலமுடன் ஒரு திண்மக் கரைலை உருவாக்குகிறது. வெப்பச்சிதைவு அலுமினாவை விட்டுவிடுகிறது. இத்தகைய அலுமினா அரைக்கும் பொடிகளின் உற்பத்தியிலும், செயற்கை இரத்தினக்கல் தயாரிப்பதில் முன்னோடிச் சேர்மமாகவும் பயன்படுத்தப்படுகிறது. [2]

அம்மோனியம் அலுமினியம் சல்பேட்டானது சமமோலார் அளவு அம்மோனியம் சல்பேட்டு மற்றும் அலுமினியம் சல்பேட்டு கரைசல்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக முதலில் 15.8 கிராம் அலுமினியம் சல்பேட்டு (எக்சாடெக்காஐதரேட்டு) 15 மிலி சூடான நீரில் கரைக்கப்படுகிறது. பின்னர் அது தேவையான அளவு நீர் சேர்க்கப்பட்டு 25 மிலி அளவிற்கு மாற்றப்படுகிறது. முன்னதாக அலுமினியம் சல்பேட்டு முற்றிலுமாக கரைந்து விட்டது என்பது உறுதிப்படுத்திக்கொள்ளப்பட வேண்டும். பிறகு 3.3 கிராம் 15 மிலி நீரில் சேர்க்கப்பட்டு உப்பானது முழுவதுமாகக் கரையும் வரை நன்கு கலக்கப்படுகிறது. அலுமினியம் சல்பேட்டிற்கு செய்தது போலவே அம்மோனியம் சல்பேட்டு கரைசலும் தேவையான அளவு நீர் சேர்க்கப்பட்டு 25 மிலி அளவிற்கு மாற்றப்படுகிறது. பின்னர் தயாரித்து வைக்கப்பட்ட இரண்டு கரைசல்களும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்கப்படுகிறது. அறை வெப்பநிலையில், இந்தக் கரைசலானது இருக்க அனுமதிக்கப்படுகிறது. படிகங்கள் உருவாகத் தொடங்கியிருக்கும் நிலையில் கரைசலானது மீண்டும் வெப்பப்படுத்தப்பட்டு பின்னர் குளிர்விக்கப்படுகிறது. தற்போது பெரிய அளவிலான அம்மோனியம் அலுமினியம் சல்பேட்டு படிகங்கள் கிடைக்கின்றன. ஒரு மணி நேரம் கழிந்த பிறகு பெரிய அளவிலான படிகங்கள் தோன்றியிருக்கும். எஞ்சியுள்ள நீரை வடித்துப் பிரித்த பின்னர் படிகங்கள் நன்கு உலர்த்தப்படுகின்றன. [3]

பயன்கள்

[தொகு]

அம்மோனியம் ஆலம் ஒரு பெரிய தொழில்துறை வேதிப்பொருளோ அல்லது குறிப்பாக பயனுள்ள ஆய்வக வேதிக்காரணியோ அல்ல. ஆனால், இது மலிவானதும் மற்றும் திறன் வாய்ந்ததும் ஆகும். இது நீர் சுத்திகரிப்பு, தாவரப் பிசின்கள், பீங்கான் சிமென்ட்டு, நாற்றம் நீக்கிகள் மற்றும் தோல் பதனிடுதல், சாயமிடுதல் மற்றும் தீத்தடுப்பு ஆடைகள் உற்பத்தி ஆகியவற்றிலும் பல முக்கிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[4] கசிவினைக் கொண்ட மேற்பூச்சு பயன்பாட்டிற்கான அம்மோனியம் ஆலமின் கரைசலின் காரகாடித்தன்மைச் சுட்டெண் பொதுவாக 3 முதல் 5 வரை (சற்று அமில வரம்பில்) இருக்கும்.[5]

விலங்குகளை விரட்டும் தெளிப்பான் மருந்துகளில் அம்மோனியம் ஆலம் ஒரு பொதுவான உட்பொருள் ஆகும். [6] [7] [8]

இது தாங்கல் கரைசலாகவும், நடுநிலைப்படுத்தும் காரணியாகவும், நிறமூன்றி வேதிப்பொருளாகவும் பயன்படுகிறது.

நச்சியல்

[தொகு]

பாலூட்டிகளுக்கு மிதமான நச்சுத்தன்மை கொண்டது. மீன் மற்றும் நீர்வாழ் முதுகெலும்பிகளுக்கு நச்சுத்தன்மையற்றது.[9]

ஆலம் ஒரு காலத்தில் பாதுகாக்கப்பட்ட காய்கறிகளில் மிருதுவான தன்மையை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஊறுகாய் மூலப்பொருளாக இருந்தது. இயற்கையான பெக்டினுடன் இச்சேர்மம் வினைபுரியும் காரணமாக மேற்சொன்ன பயன்பாடு இருந்தது. இப்பொருள் அல்சைமர் நோய்க்கான காரணியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக தற்போது இத்தகைய பயன்பாட்டில் இல்லை. ஊறுகாய் இடுதலில் பரிந்துரைக்கப்படுவதுமில்லை. [10] ஆனால் இதன் E எண் E523 என அழைக்கப்படுகிறது.

அலுமினியம் சல்பேட்டு, அம்மோனியம் ஆலமுடன் நெருக்கமான தொடர்புடையது. இச்சேர்மம் 6207மிகி/கிலோ LD50 என்ற அளவில் நச்சுத்தன்மை அற்ற சேர்மமாக கருதப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. வார்ப்புரு:GHS class NZ.
  2. Otto Helmboldt, L. Keith Hudson, Chanakya Misra, Karl Wefers, Wolfgang Heck, Hans Stark, Max Danner, Norbert Rösch "Aluminum Compounds, Inorganic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2007, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a01_527.pub2
  3. "Make Ammonium alum or Ammonium aluminium sulfate". youtube. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
  4. "Alum", The Columbia Encyclopedia (6th ed.), Ithaca, NY: Columbia University Press, 2004, பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.
  5. Aluminum Ammonium Sulfate Material Safety Data Sheet, J. T. Baker, March 2009, பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.
  6. D-TER Animal and Bird Repellent, Bruce Harris Project Management Pty Ltd, 2004-09-04, archived from the original on 2009-10-15, பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  7. Multicrop Scat Bird and Animal Repellent Data Sheet (PDF), Multicrop (Aust.) Pty. Ltd., 2003-03-04, பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  8. Pest Control: Foxes, Tandridge District Council (UK), February 2006, பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  9. "அலுமினிய அம்மோனியம் சல்பேட்". IUPAC. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
  10. "Safe Preserving: Grape Leaves, Alum and Old Wive's Tales". University of Wisconsin. September 18, 2013. Archived from the original on March 7, 2014.