அம்மை (பாட்டின் வனப்பு)
Jump to navigation
Jump to search
அம்மை என்னும் சொல் தாய், எழில் என்னும் பொருள்களைத் தரும். பாட்டுக்கு எழில் என்பது சுருக்கமாகச் சொல்லல். சுருக்கமாகச் சொல்லும் பா வகையைத் தொல்காப்பியம் அம்மை எனக் குறிப்பிடுகிறது.
அம்மை என்பது பாட்டின் வனப்புகள் என்று தொல்காப்பியம் காட்டும் எட்டில் ஒன்று. சில சொற்களைக் கொண்ட பாக்கள் தவ்வித் தவ்வி நடக்கும் நூல் அம்மை வனப்பினைக் கொண்டது. திருக்குறள் அம்மை வனப்பு கொண்ட நூல்.[1]
- எடுத்துக்காட்டு
- அறிவினான் ஆகுவ(து) உண்டோ பிறிதின் நோய்
- தன்நோய்போல் போற்றாக் கடை – திருக்குறள் 315
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
வனப்பு இயல்தானே வகுக்கும் காலை
சில் மென் மொழியான் தாய பனுவலின்
அம்மைதானே அடி நிமிர்வு இன்றே. தொல்காப்பியம் செய்யுளியல் 227