உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மையப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓருருவில் அம்மையப்பர் சிலை
ஈருருவில் அம்மையப்பர் சிலை

”உயிரினங்களுக்கெல்லாம் தாய்தந்தையர் உண்டு. மரத்தின் விதைக்குக்கூட அதன் விதையைத் தோற்றுவித்த மூலப் பெற்றோர் உண்டு. தானே தோன்றி மறையும் பாசிக்குக்கூட ஈரம்-வெப்பம் தாய்தந்தை”. இந்தக் மூலத்துக்கு மனித உரு தந்து தமிழ்மக்கள் வழிபட்டுவந்தனர். இந்த உருவத்தை அம்மையப்பன் (அம்மை அப்பன்) என்றனர். ஓருருவ வடிவிலும், ஈருருவ வடிவிலும் இதனை வழிபடுவர். ஓருருவ வடிவத்தை 'அர்த்தநாரி' என்றும், அர்த்தநாரீசுவரன் என்றும் குறிப்பிடுவர். [1] [2]

அம்மையை ஆற்றல் என்றும், அப்பனை வெட்டவெளி என்றும் கண்டனர். அப்பனுக்குச் “சிவ்” என்று ஏறும் சத்தி வருவது அம்மையால். எனவே அப்பனைச் சிவன் என்றும், அம்மையைச் சத்தி என்றும் தூய தமிழ்ச்சொற்களால் பெயரிட்டுக்கொண்டனர்.

இப்படி உருவான வழிபாட்டு உருவமே அம்மையப்பர். சிவம் சைவம் என்று சைவம் என மருவிற்று. மயல் < மையல், பயல் < பையல், பையன், போன்றவற்றை ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளலாம்.

சங்கப்பாடலில் அம்மையப்பர் உரு[தொகு]

மதுரைக் கண்ணத்தனார் என்னும் புலவர் பகலும் இரவும் கலந்து நிற்கும் அந்திவானம் அம்மையப்பன் உருவம் போலக் காணப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். செவ்வானம் மறைக்கும் சிவன் போலவும், இருள் மால் போலவும் ஒன்று சேர்ந்திருப்பது இருபெருந் தெய்வங்கள் ஒருங்கிணைந்து இருப்பது போலக் காணப்பட்டதாம். [3]

வள்ளலார் பாடல்[தொகு]

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாயணைப்பள் தாயடித்தால்
பிடுதொரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத்து ஆடும் புனிதன் நீ ஆதலால் என்னை
அடுத்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா இனி ஆற்றேன். [4]

மேலும் படங்கள்[தொகு]

  • இடப்புறம் அம்மை தமிழ்மரபு.
  • வலப்புறம் அம்மை புதிர்மரபு.

அடிக்குறிப்பு[தொகு]

  1. அர்த்தம் எனபது பாதியைக் குறிக்கும் வடசொல். நார் என்பது வாழை-நார் போல உடலில் ஓடும் நரம்பு. இது தமிழ்ச்சொல். ஆண்பாதி, பெண்பாதியாக நாடிநரம்புகளால் ஒன்றுபட்டிருக்கும் ஓர் உருவம் அர்த்த நார் ஈசுவரர்
  2. நார் என்பது அன்பைக் குறிக்கும் தமிழ்ச்சொல். "நலத்தின்கண் நார் இன்மை தோன்றின்" என்னும் திருக்குறளில் இப் பொருள்படுவதைக் காணலாம். அன்பால் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு உள்ளங்கள். இது ஈருருவ அம்மையப்பர்.
  3. வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து
    ஒருங்குடன் இருந்த தோற்றம் போல - அகநானூறு 360

  4. திருவருட்பா 3386
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மையப்பர்&oldid=2740004" இலிருந்து மீள்விக்கப்பட்டது