அம்மா (திரைப்படம், 2017)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்மா
Mom
இயக்கம்இரவி உத்யவார்
தயாரிப்புபோனி கபூர்
சுனில் மன்சாண்டா
நரேஷ் அகர்வால்
முகேஷ் தல்ரேஜா[1]
கௌதம் ஜெயின்
திரைக்கதைகிரிஷ் கோலி
இசைSongs:
ஏ. ஆர். ரகுமான்
Background Score:
ஏ. ஆர். ரகுமான்
குதுப்-இ-கிருபா
நடிப்பு
ஒளிப்பதிவுஅனாய் கோஸ்வாமி
படத்தொகுப்புமோனிஷா ஆர். பால்டாவா
கலையகம்எம் ஏ டி பிலிம்சு (சுனில் மன்சாண்டா)
மூன்றாவது கண் படங்கள்(Third Eye Pictures(நரேஷ் அகர்வால்)
விநியோகம்ஜீ ஸ்டுடியோ
ஸ்ரீதேவி புரொடக்ஷன்ஸ் (போனி கபூர்)
வெளியீடுசூலை 7, 2017 (2017-07-07)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு370 மில்லியன்[2]
மொத்த வருவாய்மதிப்பீடு. 649 மில்லியன்[3]

அம்மா (Mom); இது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த, அறிமுக இயக்குனரான இரவி உத்யவார் இயக்கிய, இந்திய குற்றவியல் சார்ந்த திகில் திரைப்படமாகும். போனி கபூர், சுனில் மன்சந்தா, முகேஷ் தல்ரேஜா, நரேஷ் அகர்வால், மற்றும் கௌதம் ஜெயின் தயாரித்த இத்திரைப்படத்தில், பட நாயகியாக ஸ்ரீதேவியும், விழிப்புடன் பழிவாங்கும் முதலாந்தார மகளாக, பாகிஸ்தானிய நடிகை சாஜல் அலியும் நடித்துள்ளார்கள்.[4] அக்ஷய் கன்னா மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ள இந்த படத்தில்,[5] ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து தயாரித்துள்ளார்.[6] மேலும் இத்திரைப்படத்தின் நாயகியான ஸ்ரீதேவியின் 300 ஆவது திரைப்படமாகவும், மற்றும் அவரது கடைசி திரைப்படமாகவும் இந்த அம்மா (Mom) திரைப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[7] (அதாவது பிப்ரவரி 24, 2018 ஸ்ரீதேவியின் இறப்பிற்கு முன் நடித்து வெளியான கடைசி திரைப்படம்)[8]

2017 ஆம் ஆண்டு, சூலை 7 இல் நான்கு மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம், திரைப்பட விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இது, வணிக ரீதியாக வெற்றிகரமாக உலகளாவிய அளவில் 56 கோடி ரூபாய் வசூலித்தது.[9] இந்தியாவின் ஒரு மிகப் பிரபலமான ஆங்கில மொழியின் அகன்ற தாள்களைக் கொண்ட நாளிதழான தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்த திரைப்படத்தின் நாயகியாக நடித்த ஸ்ரீதேவியை, “இந்திய திரைப்படத்துறையின் உயர்ந்த பெண் பாதிரி என புகழாரம் சூட்டி பாராட்டியது.[10] மேலும் ஆங்கிலத்தில் 63 ஆவது பிலிம்பேர் விருதுகள் நிகழ்வில், ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடிகைக்கான விமர்சகர் போன்ற விருதும், மேலும் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது, சித்திக் உள்ளிட்டோர் என, இந்த திரைப்படத்திற்கு, மொத்தம் 6 பிலிம்பேர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டது.[11]

கதை[தொகு]

உயிரியல் ஆசிரியரான தேவ்கி (ஸ்ரீதேவி) தனது மாணவர்களிடையே மிகவும் உற்சாகமானவர். தேவ்கி, பத்து வயது பெண் குழந்தைக்கு தாய் என்றாலும் தன் மூத்தாரின்(கணவனுடைய தமையன்) வயதுக்கு வந்த இளம் பெண்ணையும் தன் மூத்தக்குழந்தையாகவே பாவித்து வளர்க்கிறார். கூடவே அவர் படிக்கும் பள்ளியில் அவர் வகுப்பு ஆசிரியையாகவும் இருக்கும் தேவகி, அந்த வகுப்பில் தன் மகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஒரு மாணவனை கண்டிப்பதுடன் அவனது அலைபேசியையும் பிடுங்கி உடைத்தெறிகிறார். இதில் அவமானமாகும் அந்த மாணவன் தன் மூத்த சகாக்கள் மற்றும் சகோதரனுடன் இணைந்து தன் தோழிகளுடன் காதலர் தின இரவு நேர விருந்திற்கு வரும் தேவகியின் மூத்த மகளைக் காரில் கடத்தி குழு பாலியல் வல்லுறவு செய்து கொலை முயற்சியும் செய்து காரில் இருந்து தூக்கி எறிந்து விட்டு., சட்டத்தின் பிடியில் இருந்தும் தப்பிக்கின்றனர் . அவர்களுக்கு தேவகி, புகட்டும் பழிக்கு பழியும், பாடமும், அதன் மூலம் மகளுக்கு தன் தாய்மையை புரியவைக்கும் விதமுமே. "மாம்" எனும் அம்மா திரைபடத்தின் கதையாகும்.[12]

கதைக்கரு[தொகு]

தனது கணவனுடைய தமையனின் மகளை பாலியல் பலாத்கரம் செய்த கும்பலை பழி வாங்கும் தாய் தான் " மாம் " திரைபடத்தின் கருவாகும்.[12]

காட்சிப்படுத்தல்[தொகு]

ஜீ ஸ்டுடியோ மற்றும் போனி கபூர் வழங்கிய இப்படம், ஏ மேட் பிலிம்சு மற்றும் நரேஷ் அகர்வால் பிலிம் புரொடக்ஷன்சு தயாரிப்பில் உருவாக்கப்பட்டதாகும். மோனிஷா ஆர். பால்டாவா படத்தொகுப்பில், அனய்கோஸ்வாமி, ஒளிப்பதிவு செய்த மாம் எனும் இந்த திரைப்படத்தில், ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து, இரவி உதய்வார் இயக்கியுள்ளார். கதையின் நாயகியான நடிகை ஸ்ரீதேவி கபூருடன் அக்ஷய் கண்ணா, சாஜல் அலி, அத்னன் சித்திக், அபிமன்யூ சிங், நவ்சுதின் சித்திக் உள்ளிட்ட இந்தித் திரையுலகில் உள்ள நட்சத்திரப்பட்டாளங்கள் நடிக்க, இந்தி , தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தில், மூத்தாரின் மகளுக்கு அவரது அப்பாவின் இரண்டாம் தாரத்தை தனது அன்னையின் இடத்தில் வைத்து பார்க்க ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவளின் மனதை, அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், டெல்லி சாலைகளில் நடு இரவில் காரில் இளம் பெண்ணை ஒரு கும்பல் கடத்தி, கூட்டு பலாத்காரம் செய்யும் காட்சி, விரசம் இல்லாமல் அதே நேரம் காண்போர் மனம் "பக்,,, பக்,,,"என அடித்துக் கொள்ளும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும், ஸ்ரீதேவியின் அழகிய குடும்பமும், குலுமணாலி சுற்றுலா தளங்களை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.[12]

நடிகர்கள்[தொகு]

  • ஸ்ரீதேவிதேவகி சபர்வால்
  • சஜல் அலி →ஆர்யா
  • ஆனந்த் சித்திக் →ஆனந்த்
  • நவாசுதீன் சித்திக் →தயா ஷங்கர் "டி. கே" கபூர்
  • அக்சய் கண்ணாசிபிஐ அதிகாரி மாத்யூ பிரான்சிஸ்
  • அபிமன்யூ சிங் →ஜகன்
  • பிடோபாஷ் →பாபுராம்
  • விகாஸ் வர்மா →சார்லஸ் திவான்
  • இவான் ரோட்ரிகஸ் →பள்ளி முதலவர்
  • ஆதர்ஷ் குரேவ் →மோஹித்[13]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_(திரைப்படம்,_2017)&oldid=2922985" இருந்து மீள்விக்கப்பட்டது