உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மா இலக்கிய விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மா இலக்கிய விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1ஹம்சா தனகோபால்2016
2முனைவர் மீ. சு. ஸ்ரீஇலட்சுமி[1]2017
3முனைவர் உலகநாயகி பழனி2018
4திருமதி உமையாள் முத்து[2]2019
5முனைவர் தி. மகாலட்சுமி2020
6முனைவர் மு. சற்குணவதி2021
7தி. பவளசங்கரி [3]2022
8முனைவர் சரளா இராசகோபாலன் [4],[5]2023

சிறப்புப் பயண அட்டை

[தொகு]

விருதாளர்கள் அனைவருக்கும், அனைத்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் (குளிரூட்டப்பட்டப் பேருந்துகள் தவிர) வாழ்நாள் முழுவதும் கட்டணமின்றி பயணிப்பதற்கான சிறப்புப் பயண அட்டை வழங்கப்படுகிறது. [6]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "2016 மற்றும் 2017ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய், கபிலர் உ.வே.சா., கம்பர் விருது: முதல்வர் வழங்கினார்". www.dinakaran.com. Archived from the original on 2021-01-15. Retrieved 2021-03-05.
  2. "2019ம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருது: தமிழக அரசு அறிவிப்பு". www.dinakaran.com. Archived from the original on 2022-03-16. Retrieved 2021-03-05.
  3. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
  4. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  5. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.
  6. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_இலக்கிய_விருது&oldid=4626842" இலிருந்து மீள்விக்கப்பட்டது