அம்மன் காசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Amman Coin.jpg
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒரு அம்மன் காசு (1889-1906)

அம்மன் காசு என்பது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் மன்னர்கள் வெளியிட்ட நாணயம் ஆகும். இந்த நாணயத்தின் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால்தான் அதற்குபுதுக்கோட்டை அம்மன் காசு என்ற பெயர் ஏற்பட்டது.[1] இக்காசை புதுக்கோட்டை அம்மன் சல்லி என்றும் அழைப்பார்கள்.

மதிப்பீடு[தொகு]

பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம். இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள் என்றும், அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டுவந்ததாக கூறிக்கொண்டனர்.


வெளி இணைப்புகள்[தொகு]

  • "அம்மன் காசு!". பார்த்த நாள் செப்டம்பர் 9, 2017.
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்_காசு&oldid=2602717" இருந்து மீள்விக்கப்பட்டது