அம்மனூர்
அம்மனூர் | |
|---|---|
சிற்றூர் | |
அம்மனூர், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°37′51″N 79°38′30″E / 10.6308°N 79.6418°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் |
| ஏற்றம் | 29.36 m (96.33 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,625 |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 610201 |
அம்மனூர் (Ammanur) என்பது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருவாரூருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அம்மனூர் கிராமத்தில் 785 ஆண்களும், 840 பெண்களும் என மொத்தம் 1,625 பேர் இருந்தனர். எழுத்தறிவு வீதம் 85.1 % ஆகும்.[1] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ ஏறக்குறைய ஒத்து உள்ளது.
சாலை வழி
[தொகு]திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கச்சனம் உள்ளது. அதில் இருந்து 4 கி.மீ. வலப்பக்கம் சென்றால் அம்மனூரை அடையலாம்.
தொடருந்து நிலையம்
[தொகு]திருவாரூர் - காரைக்குடி தடத்தில் அம்மனூர் தொடருந்து நிலையம் உள்ளது.
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ammanur Village , Tirutturaippundi Block , Thiruvarur District".
{{cite magazine}}: Cite magazine requires|magazine=(help) - ↑ "முன் ஜென்ம வினைகள் நீக்கும் அம்மனூர் அகத்தீஸ்வரர்". 2023-12-14.
{{cite magazine}}: Cite magazine requires|magazine=(help)