அம்ப்லோட்டு ஹெரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்ப்லோட்டு ஹெரான்
Ardea humbloti.jpg
அம்ப்லோட்டு ஹெரான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பெலிகனிபார்மசு
குடும்பம்: அர்டெயிடே
பேரினம்: ஆர்டியா
இனம்: ஆ. அம்ப்லோட்டி
இருசொற் பெயரீடு
ஆர்டியா அம்ப்லோட்டி
மில்னே எட்வர்டுசு & கிராண்டிடியர், 1885

அம்ப்லோட்டு ஹெரான் (Humblot's heron)(ஆர்டியா அம்ப்லோட்டி), மடகாசுகர் ஹெரான் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹெரான் சிற்றினமாகும். மடகாசுகரில், வடக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் இது பொதுவாகக் காணப்படும். அலோத்ரா ஏரிக்கு அருகிலும் இது காணப்படுகிறது. இது கொமோரோ தீவுகள் மற்றும் மயோட்டேவிலும் காணப்படுகிறது. அம்ப்லோட்டின் ஹெரான் அருகிய இனமாகும். இதன் எண்ணிக்கை 1,500 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வேட்டையாடுதல் (பறவை மற்றும் அதன் முட்டைகள் இரண்டும்) மற்றும் வாழ்விட அழிவு (கூடு கட்டும் மரங்களை வெட்டுதல் மற்றும் ஈரநிலங்கள் அழிவது இதனுடைய அழிவிற்கு முக்கியக் காரணமாகும்.

இதனுடைய விலங்கியல் பெயர் பிரான்சு இயற்கை ஆர்வலர் இலியோன் அம்ப்லோட்டை நினைவுகூருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ப்லோட்டு_ஹெரான்&oldid=3486905" இருந்து மீள்விக்கப்பட்டது