அம்ப்போரா மதுச்சாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்ப்போரா மதுச்சாடி என்பது யவனர்களால் (கிரேக்கர், ரோமானியர்) செய்யப்பட்ட மதுச்சாடிகளாகும். இவை புதிய கற்காலம் முதலே கிரேக்கர்களால் தயாரிக்கப்பட்டன. இவை தமிழகத்தில் இரவிமங்கலம் போன்ற இடங்களில் காணப்படுவதால் இவற்றின் மூலம் யவனர் மற்றும் தமிழருக்குமான தொடர்புகளை அறிய முடியும்.

அம்போராவில் தமிழ் பிராமி[தொகு]

இச்சாடிகள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே கிரேக்கர்களால் தயாரிக்கப்பட்டாலும் கி.பி. முதலாம் நூற்றாண்டு இவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு அவற்றில் தென்னிந்திய பாசி மணிகளும் பொறிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன. தமிழ் பிராமி எழுத்து பொறித்த அம்போரா சாடி ஒன்றின் பகுதி ணாந்தை கீரன் என்ற பெயருடன் ஓமான் நாட்டில் காணப்படுவது கி.பி. முதலாம் நூற்றாண்டில் அப்பகுதியில் தமிழரின் வணிகச் செல்வாக்கு பரவியதை காட்டுகிறது.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. T. S. SUBRAMANIAN (அக்டோபர் 28, 2012). "Potsherd with Tamil-Brahmi script found in Oman". www.thehindu.com (சென்னை). http://www.thehindu.com/news/national/potsherd-with-tamilbrahmi-script-found-in-oman/article4038866.ece. பார்த்த நாள்: அக்டோபர் 28, 2012. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ப்போரா_மதுச்சாடி&oldid=2238187" இருந்து மீள்விக்கப்பட்டது