உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பேத்ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பேத்ராஜன்
உத்தரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட இந்திய மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
5 சூலை 2010 – 4 சூலை 2016
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பகுஜன் சமாஜ் கட்சி

அம்பேத் ராஜன் (Ambeth Rajan, பிறப்பு 9 பெப்ரவரி 1956, மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம், (தமிழ்நாடு)) என்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையிவில் உத்தரப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

அம்பேத் ராஜன் தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் கன்சிராமின் உதவியாளராக இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் பலவகையிலும் ஈடுபட்டார். கன்சிராமை காண தமிழ்நாட்டுத் தலைவர்ககள் வரும்போது அவர்களுக்கு இடையில் பாலமாக இருந்துள்ளார். கன்சிராம் உடல் நலமின்றி சிகிச்சைக்கு சென்னை வந்தபோது தன்னுடன் அம்பேத்ராஜனையும் அழைத்து வந்தார். கன்சிராமின் மறைவுக்குப் பின்னர் மாயாவதியின் உதவியாளராகவும், தனிச்செயலாளராகவும், கட்சியின் தேசியச் செயலாளராகவும் தொடர்ந்தார். மாயாவதியால் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உத்தரப் பிரதேசத்திலிருந்து அனுப்பபட்டார்.[2] பிற்காலத்தில் மாயாவதியிடம் இருந்து விலகிய இவர் 2020 இல் பா.ஜ.க.வில் இணைந்தார்.[3] இவர் நொய்டாவில் வசிக்கிறார்.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. "Detailed Profile: Shri Ambeth Rajan". Govt. Of India. Archived from the original on 4 March 2016. Retrieved 13 October 2015.
  2. "பிற இதழிலிருந்து... திராவிடர் கழகத் தலைவர் பற்றி 'தினமணி கதிர்' 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!". Retrieved 2022-02-17.
  3. "பா.ஜ.க.வில் இணைந்தார் பிரமிடு நடராஜன்!". nakkheeran (in ஆங்கிலம்). 2020-07-24. Retrieved 2022-02-17.
  4. "Rajya Sabha Affidavits". MyNeta.info. Retrieved 13 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பேத்ராஜன்&oldid=4191087" இலிருந்து மீள்விக்கப்பட்டது