அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை

ஆள்கூறுகள்: 13°1′9″N 80°16′1″E / 13.01917°N 80.26694°E / 13.01917; 80.26694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பேத்கர் நினைவகம்
அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபம்
ஆள்கூறுகள்13°1′9″N 80°16′1″E / 13.01917°N 80.26694°E / 13.01917; 80.26694
இடம்அடையார், சென்னை, இந்தியா
வகைநினைவகம்
கட்டுமானப் பொருள்கற்காரை
துவங்கிய நாள்திசம்பர் 1998 (அடிக்கல் நாட்டப்பட்டது)
திறக்கப்பட்ட நாள்சூன் 10, 2000
அர்ப்பணிப்புபீமாராவ் அம்பேத்கர்

அம்பேத்கர் மணிமண்டபம் (Ambedkar Manimandapam) என்பது இந்தியாவில், சென்னை நகரில் உள்ள, அடையாரில், இந்திய அரசியலமைப்பின் சிற்பி பீமாராவ் அம்பேத்கரின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள ஒரு நினைவகமாகும். இந்த நினைவகமானது மந்தைவெளி, பசுமைவழிச் சாலையில், அடையார் கயவாய் பகுதியில் அமைந்துள்ளது.


தமிழ் நாட்டின் தலைநகர் சிங்கார சென்னையில் தலித் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் அண்ணல் அம்பேத்கருக்கு ஒரு மணி மண்டபம் இல்லை என்பதால் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை மூர்த்தியார் அவர்கள் ஒரு மணி மண்டபம் கட்டியே ஆக வேண்டும் என்று பல ஆண்டுகளாக சட்ட போராட்டம், மனு கொடுத்தல் என்று போராடி வந்தார்.

ஒரு கட்டத்தில் பூவை மூர்த்தியார் தனது தொண்டர்களுக்கு ஒரு ஆணை பிறப்பித்தார் புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு செங்கல் கொண்டுவந்து அடையாறில் வைக்க வேண்டும் நாமே அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்பதே அந்த ஆணை ஆகும். பூவையாரின் சமரசம் அற்ற போராட்டத்தை கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா  1993-ஆம் ஆண்டில் உடனடியாக பூவையார் அவர்களை அழைத்து பேசி சமாதானம் செய்ததோடு அவசரகால திட்டம் வகுத்து 5 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 4 கோடி 50 லட்சம் மதிப்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மணி மண்டபம் மற்றும் ஆடிடோரியம் கட்டுவது என்றும் அதை THADCO (Tamil Nadu Adi-Dravidar Housing and Development Corporation) கட்டுமானம் செய்யும் என்றும் அறிவித்து அடிக்கல் நாட்டினார். அந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு கொடுத்து இருந்தது ஆனால் அண்ணன் பூவையார் சில காரணங்களால் வர தாமதம் ஆகி விடுகிறது அடிக்கல் நாட்டி முடியும் தருவாயில் அண்ணன் பூவையார் அங்கு வந்து விட விழாவின் கவனத்தை சிதைக்காமல் மக்களோடு மக்களாக நின்று விடுகிறார் அதை சிறிது நேரம் கழித்து மேடையில் இருந்து கவனித்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உடனடியாக அண்ணன் பூவையாரை மேடைக்கு அழைத்து அமரவைத்தார் அந்த நிகழ்ச்சிக்கு அண்ணன் பூவை மூர்த்தியார் தவிர அன்றைய அல்லது இன்றைய தலித் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை என்பது வரலாறு.

ஆனால் அப்போது பசுமை காப்பாளர்கள் என்ற போர்வையில் இருந்த சாதி வெறியர்கள் மற்றும் அடையாறு பணக்கார வர்கம்  அடையாறில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மணி மண்டபம் வர கூடாது என்று மிகுந்த பண செலவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் அந்த வழக்கு 5 ஆண்டுகள் நடை பெற்றது இறுதியாக ஒரு மாபெரும் சரித்திர தீர்பை 1998 ஆம் ஆண்டு அன்றைய உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் வழங்கினார்.

தீர்ப்பில் தமிழக அரசு முடிவு செய்த அதே இடத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டலாம் என்றும் ஆடிட்டோரியம் கட்ட வேண்டாம் என்றும் 5 ஏக்கர் பரப்பளவு நிலம் இல்லை என்பதால் 1.5 ஏக்கர் பரப்பளவில் மணி மண்டபம் மட்டும் கட்ட உத்தரவு பிறப்பித்தார்.

ஆகையால் அதே இடத்தில் அன்றைய முதல்வர் திரு மு கருணாநிதி மீண்டும் 1998 இல் அடிக்கல் நாட்டி 0.75 ஏக்கரில் மணி மண்டபம், மார்பளவு சிலை மற்றும் 0.75 ஏக்கரில் புல்வெளி மற்றும் தோட்டம் அமைப்பது என்றும் THADCO அதை ரூபாய் 4 கொடி 50 லட்சம் செலவில் செய்து முடிக்கும் என்றும் தெரிவித்தார்.

இத்தனை போராட்டங்களுக்கு பிறகு   அறிவிக்கப்பட்ட திட்டம்  1998 இல்  அடிக்கல் நாட்ட பட்டு 2000 ஆம் அன்றைய முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

1993 ஆம் ஆண்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், தமிழ்நாடு அரசாங்கம், அம்பேத்கருக்கு நினைவகம் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்காக சென்னை, அடையார் கயவாய் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் நினைவகத்திற்கான அடிக்கல் அப்போதைய முதலமைச்சரான செல்வி ஜெ. ஜெயலலிதாவால் நடப்பட்டது. இருப்பினும், சென்னையிலுள்ள சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடின. 1994 ஆம் ஆண்டில், நீதியரசர் கனகராஜ் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். அவரது தீர்ப்பில் கட்டுமானமானது அடையாளம் காணப்பட்ட இடத்தில் 1.5 ஏக்கர் நிலப்பகுதியை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கலையரங்கம் போன்ற எந்த ஒரு கட்டுமானமும் இன்றி கட்டப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தது. இது தொடர்பாக இன்னொரு முறை வேறு சில பிரச்சனைகளுக்காக நீதிமன்றம் சென்று வழக்கானது முடித்துவைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு திசம்பரில் நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நினைவகமானது 0.75 ஏக்கர் அளவில் கட்டப்பட்டு மீதமுள்ள இடங்கள் புல்வெளிகளுக்கும் இதர அலங்கார வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.[1]

பல ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டங்களுக்கு பின்பு, நினைவு மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் சூன் 1999 ஆம் ஆண்டு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் ஆக்கச் செலவிற்கு 45 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் ஆரம்பத்தளம் கட்டுவதற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகம் (THADCO) மேற்கொண்டது. 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதி, அப்போதைய முதல்வரான கருணாநிதி இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.[2]

நினைவகத்தின் அமைப்பு[தொகு]

இந்த நினைவகத்தின் கட்டிடப் பரப்பானது 8,285 சதுர அடி (769.7 சதுர மீட்டர்) ஆகும். இந்த நினைவகம் 55 அடி விட்டம் கொண்ட அரைக்கோள வடிவ குவி மாடத்தை தனது உச்சியில் கொண்டுள்ளது. 1930 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட ஒளிப்படம், பெரியார் ஈ. வே. ராமசாமி உடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் உள்ளிட்ட 12 ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Adyar Creek—Over the Years". Madras Musings (Chennai: Madras Musings) XVI (13): 1. 16–31 October 2006. http://madrasmusings.com/older-archives/Vol%2016/Vol%20XVI%20-%20No%2013.pdf. பார்த்த நாள்: 21 Apr 2016. 
  2. 2.0 2.1 "CM to open Ambedkar memorial today". The Hindu (Chennai: The Hindu). 10 June 2000 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629104148/http://hindu.com/2000/06/10/stories/04104016.htm. பார்த்த நாள்: 21 Apr 2013.