அம்புலி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்புலி ஆறு (Amballur) திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் ஓடும் ஒரு சிற்றாறாகும். அக்னி ஆற்றுப் படுகையில் ஓடும் இந்த ஆறு, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அம்புலியாறு அம்மன்சத்திரம் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.[1] பூனைக்குட்டியாறு மற்றும் மருதங்குடியாறு ஆகியவை இதன் துணையாறுகளாகும். இந்தாற்றின் குறுக்கே அடைக்களதேவன் அணைக்கட்டுள்ளது. அம்புலி ஆறு திருச்சிராப்பள்ளி காவேரி அற்றில் இருந்து பிரியும் ஒரு சிற்றாறு ஆகும்.இந்த ஆறு புதுக்கோட்டை, ஆலங்குடி, பள்ளத்திவிடுதி, ஆலங்காடு, சூரன்விடுதி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம் முதலிய இடங்களில் "அம்புலி ஆறு" எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது.இது நகரம்-சேந்தன்குடி இடையே உள்ள களுங்கடி மதுரைவீரன் கோவில் குலத்தில் முடிவடைகிறது.மற்றொன்று நகரம், கீரமங்கலம், ஆவணம், மேற்பணைக்காடு, பேராவூரணி, பைங்கால், வழியாக தஞ்சை காவேரியை அடைகின்றது.


புதுக்கோட்டை தென்கிழக்கு மாவட்டத்தின் முக்கிய ஆறுகள்:

  • அம்புலி ஆறு (ஆலங்குடி,கொத்தமங்கலம்).
  • வில்லுளி ஆறு (குலமங்கலம்,பனங்குளம்)



[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் செய்தி
  2. "இந்திய திட்டக்குழு" (PDF). Archived from the original (PDF) on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்புலி_ஆறு&oldid=3819720" இலிருந்து மீள்விக்கப்பட்டது