அம்பியாக்சஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்பியாக்சஸ்[தொகு]

1911 Britannica - Amphioxus lanceolatus

குத்தூசி எனப் பொருள்படும் வான்செட் (Lancet) என்ற பெயரால் பொதுவாக அழைக்கப்படும் அம்பியாக்சஸ் (Amphioxus)இ மீன் போன்ற தோற்றமுடைய கடல் வாழ் உயினமாகும். [1]

அம்பியாக்சஸ் பெயர் காரணம்[தொகு]

1774ஆம் ஆண்டு முதன் முதலில் இதனைப் பிரிட்டிஷ் கடற்கரையில் கண்டெடுத்த பல்லாஸ் (Pallaus)[2] என்பவர்  இதை ஓர்  ஓடற்ற நத்தை (Slug) எனக் கருதி இதற்கு லைமாக்ஸ் லான்சி யோலேட்டஸ் (Limax lanceolatus) என்று பெயரிட்தார்.  1934ஆம் ஆண்டு கோஸ்டா (Coast) என்பவர்   இதன் செலவுகள் தொண்டைப் பகுதியில் அமைந்திருந்ததால் இதற்கு பிராங்கியோஸ்டோமா (Branchiostoma) என்று பெயரிட்டார்.  யாரால் (லுயசநடட 1836) என்பவரே முதன் முதலாக இதற்கு அம்பியாக்சஸ் லான்சியோலேட்டஸ் (Amphioxus lanceolatus) என்று பெயரிட்டார்.

அம்பியாக்சஸ் வகைப்பாடு[தொகு]

முதுகு நாணுள்ளவை (Chordata) எனும் தொகுதியின் கீழ் உள்ள, தலைமுதுகு நாணுடையன (Protochordata) அல்லது மண்டையோடற்றன (Acarina) எனும் தொகுதியின் கீழ் உள்ள, தலைமுதுகு நாணுடையன (Cephalochordata)

FMIB 46373 Lancelet

எனும் துணைத்தொகுதியில் அம்பியாக்சஸ் அடங்கும்.

அம்பியாக்சஸ் உடலமைப்பு[தொகு]

அம்பியாக்சஸ் கடலில் ஆழங்குறைந்த மணற்பாங்கான பகுதிகளில் துளையிட்டு வாழ்கின்றது. இதன் சராசரி நீளம் 5 முதல் 8 செ.மீ ஆகும். ஆனால் தென் சீனா, இந்தியா ஆகிய பகுதிகளில் காணப்படும் ஓர; இனம் 15 செ.மீ. வரை நீளமுடையது. ஓளி ஊடுருவும் தன்மையுடைய இவற்றின் உடலின் இரு முனைகளும் கூராக உள்ளன. தனிப்பட்ட தலைப்பகுதியோ தாடைகளோ இல்லை. லான்சியோ லேட்டுகள் மணலில் புதைந்து. வாய்ப்பகுதி மட்டும் மணலின் தெரியும்படி இருக்கும்.

நெப்ரிழயாக்கள், பழுப்புப் புனல்கள், சிறு நீரக பப்பில்லாக்கள் ஆகியன அம்பியாக்சசின் கழிவு நீக்க உறுப்புகளாகும். குழல் போன்ற அமைப்புடைய நெப்ரியாக்களில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஆண் பெண் அம்பியாக்சஸ் இடையே இன உறுப்புகளைத் தவிர வெளித்தோற்ற வேறுபாடு ஏதும் இல்லை.

நூலோதி[தொகு]

1. Sedgwick A, A Students Text Book of Zoology, Central Book Dept, Allahabad, 1905. 2. Ekambaranatha Ayyer, Manual of Zoology Vol. II S. Visvanathan, Madras-1971. 3. Jordan, E.L. Chordate Zoology., S.Chand & Co., New Delhi, 1970.

மேற்கோள்[தொகு]

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் பக்கம் எண்:863,864

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பியாக்சஸ்&oldid=2748870" இருந்து மீள்விக்கப்பட்டது