அம்பிகை, சமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பிகை, சமணம்
அம்பிகையின் சிற்பம்
எல்லோராவின் 34வது சமணக் குகையில் அம்பிகையின் சிற்பம்

அம்பிகை (Ambika), (अम्बिका देवी சமண சமயத்தில் யட்சினி எனும் பெண் பரிவார தேவதையாவார். [1]அம்பிகை, 22வது தீர்த்தங்கரரான நேமிநாதரின் காவல் தேவதை ஆவார். சமண சமயத்தில் அம்பிகையை அம்பை , அம்பா , குஷ்மாந்தினி மற்றும் அம்ர குஷ்மாந்தினி என்றும் அழைப்பர்.[2]

சிற்பங்கள்[தொகு]

கர்நாடகா மாநிலத்தின் ஆவேரி மாவட்டத்தில் உள்ள கரஜாகி கிராமத்தில், அம்பிகையின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் சக ஆண்டு, கிபி 1251ல் நிறுவப்பட்டதாக, தேவநாகரி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.[3]

படிமவியல்[தொகு]

மத்திய கால அம்பிகையின் சிற்பம், அரசு அருங்காட்சியகம், மதுரா

சமண சமய மரபின் படி, தங்க நிற அம்பிகையின் வாகனம் சிங்கம் ஆகும். நான்கு கைகளைக் கொண்ட அம்பிகை, தனது இரண்டு வலது கைகளில் ஒன்றில் மாம்பழத்தையும், மற்றொன்றில் மாமரத்தையும் தாங்கியுள்ளார். மேலும் தனது இரண்டு இடக்கைகளின் ஒன்றில் லகானையும், மற்றொன்றில் தனது இரண்டு மகன்களையும் தாங்கியுள்ளார்.

அம்பிகையின் சிற்பங்கள் கொண்ட கோயில்கள்[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. YAKSHAS AND YAKSHINIES
  2. Ambikā or Kuṣmāṇḍinī
  3. Rare sculpture of Jain Yakshi found in Haveri Taluk, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, 18 October 2013

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ambika
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகை,_சமணம்&oldid=2937981" இருந்து மீள்விக்கப்பட்டது