உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பிகா (பெண் தெய்வம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிகா
வகைஆதிசக்தி, சக்தி, தேவி, திரிபுரசுந்தரி, துர்க்கை, மகாகாளி, நவ துர்கைகள், தச மகா வித்யா, அன்னபூரணி, புவனேசுவரி, பவானி (இந்து தெய்வம்), பைரவி (இறைவி), சப்தகன்னியர், பார்வதி, சண்டி, சித்திதாத்ரி, தாட்சாயிணி
இடம்கயிலை மலை
ஆயுதம்வட்டெறிதல் (விளையாட்டு), சங்கு, திரிசூலம், கதை, வில் - அம்பு, வாள், தாமரை
துணைசிவன்

அம்பிகா (Ambika) என்பது, இந்து சமயத்தில் வழிபடப்படும் ஒரு பெண் தெய்வமாகும். இவர், பொதுவாக பரமசிவனின் மனைவியாக ஆதி பராசக்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவர் தன் எட்டு கைகளில், பல ஆயுதங்களை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். இவர், பகவதி அல்லது சண்டி என்றும் அழைக்கப்படுகிறார். "அம்பிகா" என்பதற்கு, ஆதி சக்தி மற்றும் பிரபஞ்சத்தின் தாய் மற்றும் அனைத்து உயிரினங்களில் இருக்கும் சக்தி எனப் பொருள்படுகிறது. இவர், பார்வதியின் உடலில் இருந்து தோன்றி, சும்ப மற்றும் நிசும்பர் ஆகிய அரக்கர்களைக் கொன்ற தெய்வம் என்று கந்த புராணத்திலும், தேவி மகாத்மியத்திலும் இவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் அம்பா, துர்கா, பகவதி, பார்வதி, பவானி, அம்பே மா, செராவாலி, மாதா ராணி போன்ற பிற பெயர்களாலும் அடையாளம் காணப்படுகிறார். [1]

அம்பிகாவின் வெளிப்பாடுகள் மற்றும் அம்சங்கள்

[தொகு]

ஸ்ரீமத் தேவி பாகவதத்தில், அம்பிகா மற்ற அனைத்து தெய்வங்களின் முன்னோடி ஆவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் பல வடிவங்கள் மற்றும் பெயர்களைக் கொண்ட ஒருவராக வணங்கப்படுகிறார். இவருடைய வடிவம் அல்லது அவதாரம் இவருடைய மனநிலையைப் பொறுத்து வேறுபடுகிறது. உதாரணத்திற்கு: சதி என்பது சிவபெருமானின் முதல் மனைவியான அம்பிகாவின் ஒரு அம்சமாகும். இவர், தாட்சாயணி என்றும் அழைக்கப்படுகிறார்.
பத்ரகாளி என்பது, அம்பிகாவின் மிகக் கொடூரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர், தட்ச பிரஜாபதியின் யாகத்தை அழித்தவர் என்று கருதப்படுகிறது.
பார்வதி என்பது அம்பிகாவின் மென்மையான வடிவம் ஆகும். இவர் கௌரி மற்றும் உமா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறார்.

துர்கா என்பது அம்பிகா அரக்கர்களுடன் போர் செய்த வடிவம் ஆகும். மற்றும் சில நூல்கள் துர்கமாசூர் என்ற அரக்கனைக் கொல்ல அம்பிகா துர்காவின் வடிவத்தை எடுத்ததாகக் கூறுகின்றன.
காளி என்பது அம்பிகாவின் மற்றொரு மூர்க்கமான வடிவம் ஆகும். இவர், நேரம் மற்றும் மாற்றத்தின் தெய்வமாக போற்றி வழிபடப்படுகிறார். இவர், தனது மேனியில் மண்டையோட்டு மாலையை அணிந்தவராகவும், இடது கையில் கபாலம் மற்றும் தனது வலது கையில் திரிசூலம் ஏந்தியவாறு உக்கிரமான தோற்றத்தில் காணப்படுகிறார்.
சண்டி என்பது அம்பிகாவின் சக்தியாகக் கருதப்படும் துர்காவின் பெயர் ஆகும். இவர், கருப்பு நிறத்தில் காணப்படுகிறார். இவர், மஹிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்றவர். மேலும், சிங்கத்தின் மீது சவாரி செய்பவராக உள்ளார்.

தச மகா வித்யாக்கள் என்பது, சக்தியின் பத்து அம்சங்கள் ஆகும். தந்திரத்தில், இவர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் உள்ளது. மற்றும் இவை அனைத்தும் அம்பிகாவின் வெவ்வேறு அம்சங்களாக கருதப்படுகிறது.
52 சக்தி பீடங்கள் அனைத்தும் அம்பிகா தெய்வத்தின் விரிவாக்கங்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. நவதுர்கா, என்பது, துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் ஆகும். இதனால் அம்பிகா என்று அழைக்கப்படுகிறார்.

மீனாட்சி, மீன்களின் வடிவிலான கண்களைக் கொண்ட தெய்வம். அதனால் மீனாட்சி என்கிற பெயர் ஏற்பட்டது. காமாட்சி, அன்பு, கருணை மற்றும் பக்தியின் தெய்வமாக கருதப்படுகிறார்.
லலிதா, பிரபஞ்சத்தின் விளையாட்டுத்தனமான தெய்வமாக போற்றப்படுகிறார். இவர், தேவி அம்பிகாவின் ஒரு வடிவமாக உள்ளார்.

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் அகிலாண்டேஸ்வரி, தண்ணீருடன் தொடர்புடைய தெய்வம் ஆவார். [2]
அன்னபூரணி என்று அழைக்கப்படும் இவர், முழுமையானவர் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் தெய்வமாக வழிபடப் படுகிறார். இவர் அம்பிகாவின் ஒரு வடிவமாக கருதப்படுகிறார்.
64 யோகினிகள் என்பது, அம்பிகா தேவியின் 64 வடிவங்கள் அல்லது அம்சங்களைக் குறிக்கும் பெயராக உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. Dalal, Roshen (2010). Ambika. Penguin Books. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143415176. பார்க்கப்பட்ட நாள் 22 June 2016.
  2. Subhash C Biswas, India the Land of Gods, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1482836554, pp 331–332
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_(பெண்_தெய்வம்)&oldid=3429148" இலிருந்து மீள்விக்கப்பட்டது