உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பிகா சரண் மசூம்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிகா சரண் மசூம்தார்
Ambica Charan Mazumdar
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1850
சந்தியா, பரித்பூர் மாவட்டம், வங்காள மாகாணம்
இறப்பு19 மார்ச்சு 1922 (வயது 71-72)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1916)

அம்பிகா சரண் மசூம்தார் (Ambica Charan Mazumdar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1850 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக பணியாற்றினார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

வங்காள மாகாணத்தின் பரித்பூர் மாவட்டத்தில் (இன்றைய வங்காள தேசம்) உள்ள சந்தியா என்ற கிராமத்தில் பிறந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவராக இசுக்காட்டிசு பேராலய கல்லூரியில் பட்டம் பெற்றார். [2]

தொழில்

[தொகு]

பர்த்வானில் 1899 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காள மாகாண மாநாட்டிற்கும், 1910 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த மாநாட்டிற்கும் இவர் தலைமை தாங்கினார். 1916 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் 31ஆவது அமர்வின் தலைவராக இவர் பணியாற்றினார், அங்கு காங்கிரசுக்கும் முசுலீம் கூட்டமைப்பிற்கும் இடையே புகழ்பெற்ற லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தானது, மேலும் காங்கிரசு கட்சியின் மிதவாதிகளையும் தீவிரவாதிகளையும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

நூல்கள்

[தொகு]
  • இந்திய தேசிய பரிணாமம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.aicc.org.in/new/past-president-detail.php?id=26. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. Basu, Pradip. The Question of Colonial Modernity and Scottish Church College in 175th Year Commemoration Volume, Scottish Church College, April 2008, page 43.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_சரண்_மசூம்தார்&oldid=3822696" இலிருந்து மீள்விக்கப்பட்டது