அம்பிகா சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்பிகா சக்ரவர்த்தி (Ambika Chakrabarty) (1892 - 6 மார்ச் 1962) இவர் ஓர் பெங்காலி இந்திய சுதந்திர இயக்க இயக்க ஆர்வலரும் புரட்சியாளருவாவார். பின்னர்,இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராகவும், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் .

புரட்சிகர நடவடிக்கைகள்[தொகு]

இவரது தந்தையின் பெயர் நந்தா குமார் சக்கரவர்த்தி என்பதாகும். இவர் சிட்டகொங் யுகாந்தர் கட்சியின் உறுப்பினராக இருந்தார். சூர்யா சென் தலைமையிலான சிட்கொங் ஆயுதத் தாக்குதலில் பங்கேற்றார். ஏப்ரல் 18, 1930 அன்று, சிட்கொங்கில் முழு தகவல் தொடர்பு அமைப்பையும் அழித்த புரட்சியாளர்களின் குழுவை இவர் வழிநடத்தினார். ஏப்ரல் 22, 1930 அன்று, ஜலாலாபாத்தில் பிரித்தானிய இராணுவத்துடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இவர் பலத்த காயமடைந்தார். ஆனால் இவரால் தப்பிக்க முடிந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, இவரை அவரது மறைவிடத்திலிருந்து போலீசார் கைது செய்து மரண தண்டனை விதித்தனர். இருப்பினும், இந்த தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு போர்ட் பிளேரில் உள்ள சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டார். [1]

பிற்கால நடவடிக்கைகள்[தொகு]

இவர், 1946 இல் சிற்றறைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் , இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அதே ஆண்டில் வங்க மாகாண சட்டமன்றத்ற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டில், டோலிகுங்கே (தெற்கு) தொகுதியில் இருந்து மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 இல் கொல்கத்தாவில் நடந்த சாலை விபத்தில் இவர் இறந்தார். [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sengupta, Subodh Chandra (ed.) (1988) Sansad Bangali Charitabhidhan (in Bengali), Kolkata: Sahitya Sansad, p.33
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_சக்ரவர்த்தி&oldid=3040324" இருந்து மீள்விக்கப்பட்டது