அம்பாசரி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாசரி ஏரி

அம்பாசரி ஏரி (Ambazari lake) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் நாக்பூரின் தென்மேற்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. நாக்பூரில் உள்ள 11 ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். நகரத்தின் மிகப்பெரிய ஏரியாகக் கருதப்படும் இங்கிருந்துதான் நாக் நதி உருவாகிறது. 1870ஆம் ஆண்டில், போன்சுலே ஆட்சியின் கீழ், நகரத்திற்கு நீர் வழங்குவதற்காக அம்பாசரி ஏரி கட்டப்பட்டது. அரசு அதிகாரிகளுக்கும், பிரபலங்களுக்கும் குழாய்கள் மூலம் தண்ணீர் இங்கிருந்து வழங்கப்பட்டது. வி.என்.ஐ.டிக்கு அருகில் உள்ள இந்த ஏரி மா மரங்களால் சூழப்பட்டுள்ளது. இதை அடையாளப்படுத்தும் விதமாக மராத்தியில் மாம்பழம் என்று பொருள்படும் அம்பாசாரி என்ற சொல் ஏரிக்கு பெயராக வைக்கப்பட்டுள்ளது.

நாக்பூருக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வழங்க பயன்படுத்தப்பட்ட இந்த ஏரி அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.

தோட்டம்[தொகு]

ஏரியில் அம்பசாரி தோட்டம் என்று அழைக்கப்படும் ஒரு தோட்டமும் உள்ளது. இந்த தோட்டம் 1958 ஆம் ஆண்டில் 18 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டது. [1] தோட்டத்தை நாக்பூர் மாநகராட்சி நிர்வகித்து பாதுகாத்து வருகிறது. இசை நீரூற்று, பல்வேறு மின்சார சவாரிகள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகள் ஒரு காலத்தில் தோட்டத்தில் இருந்தன, ஆனால் அவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. தோட்டத்தில் காலையில் நடைபயிற்சிக்காக மக்கள் வந்து நடக்கின்றனர். பிற்பகலில் காதலர்களின் இடமாக இது மாறுகிறது. நாக்பூரின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pics of Ambazari lake".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "TripAdvisor link".

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாசரி_ஏரி&oldid=3362980" இருந்து மீள்விக்கப்பட்டது