அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம்
PY20 அம்பாங் பார்க் | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அம்பாங் பார்க் நிலையம் | ||||||||||||||||
| பொது தகவல்கள் | ||||||||||||||||
| வேறு பெயர்கள் | Ampang Park MRT Station Stesen MRT Ampang Park சீனம்: 安邦公园 | |||||||||||||||
| அமைவிடம் | துன் ரசாக் சாலை | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 3°09′35″N 101°43′07″E / 3.15972°N 101.71861°E | |||||||||||||||
| உரிமம் | ||||||||||||||||
| இயக்குபவர் | ||||||||||||||||
| தடங்கள் | 12 புத்ராஜெயா | |||||||||||||||
| நடைமேடை | 2 அடுக்கு நடைமேடை பக்க நடைமேடை | |||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
| கட்டமைப்பு | ||||||||||||||||
| கட்டமைப்பு வகை | நிலத்தடி | |||||||||||||||
| தரிப்பிடம் | ||||||||||||||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ||||||||||||||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||
| மற்ற தகவல்கள் | ||||||||||||||||
| நிலையக் குறியீடு | PY20 | |||||||||||||||
| வரலாறு | ||||||||||||||||
| திறக்கப்பட்டது | PY20 16 மார்ச் 2023 | |||||||||||||||
| சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Ampang Park MRT Station; மலாய்: Stesen MRT Ampang Park) என்பது மலேசியா, கோலாலம்பூர், துன் ரசாக் சாலையில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கோலாலம்பூர் அம்பாங் சாலையின் புறநகர்ப் பகுதிக்குச் சேவை செய்கிறது.
கோலாலம்பூர் மாநகர மையத்தை (கேஎல்சிசி) சுற்றியுள்ள மூன்று புத்ராஜெயா வழித்தட நிலையங்களில், இந்த PY20 அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். முன்பு அம்பாங் பார்க் பேரங்காடி (Ampang Park Shopping Centre) இருந்த இடத்தில் இந்த நிலையம் தற்போது அமைந்துள்ளது.
அத்துடன் இந்த நிலையம்; மலேசியாவிற்கான அமெரிக்க தூதரகம் (US Embassy in Malaysia), சிங்கப்பூர் உயர்ப்பேராளர் ஆணையம் (Singapore High Commission in Malaysia), கனடா உயர்பேராளர் ஆணையம் மற்றும் பிரித்தானிய உயர்ப்பேராளர் ஆணையம் ஆகியவற்றுக்கு அருகிலும் உள்ளது. இந்தத் தூதரகங்கள் அனைத்தும் தூதரக வளாகம் (Embassy Row) என்று அழைக்கப்படும் துன் ரசாக் சாலை பகுதியில் அமைந்துள்ளன.[1]
வரலாறு
[தொகு]இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2023 மார்ச் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. PY19 ராஜா ஊடா எம்ஆர்டி நிலையத்திற்கும்; PY21 கேஎல்சிசி எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு PY20 ஆகும்.[2]
இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் அம்பாங் பார்க் நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. முன்பு செயல்பாட்டில் இருந்த சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பு தற்போது புத்ராஜெயா வழித்தடம் என அழைக்கப்படுகிறது.
அதன் பின்னர் இந்த PY20 அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தில் நிலத்தடி நிலையமாக உருவாக்கப்பட்டது.
நிலத்தடி கட்டுமானங்கள்
[தொகு]

எம்ஆர்டி நிறுவனத்துடன் மலேசிய அரசாங்கம் செய்து கொண்ட நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தின் கீழ் அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் நிலத்தடியில் உருவாக்கப்பட்டது. 2016 மார்ச் மாதம் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் RM 15.47 பில்லியன் மதிப்பிலான கட்டுமான கட்டமைப்புகள் எம்ஆர்டி நிறுவனத்தால் எம்எம்சி-கமுடா (MMC-Gamuda) நிறுவனத்திடம் வழங்கப்பட்டன. கட்டுமான கட்டமைப்புகளில் நிலையங்களின் இணைப்புவழிகள், நடைமேடைகள், நிலையக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புக் கட்டுமானப் பணிகள் அடங்கும்.
13.5 கிலோமீட்டர் (8.4 மைல்) நிலத்தடி கட்டுமான ஒப்பந்தத்தில், PY16 செந்தூல் பாராட் எம்ஆர்டி நிலையம் தொடங்கி PY26 பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் வரையிலான நிலையக் கட்டுமானப் பணிகளும் அடங்கும்.[3][4][5] அனைத்து நிலையங்களின் கட்டுமானப் பணிகளும் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) திட்டத்தின் கீழ் உள்ளன. அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் 16 மார்ச் 2023-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[6][7]
ஒருங்கிணைந்த கட்டணப் பரிமாற்றம்
[தொகு]5 கிளானா ஜெயா வழித்தடத்திற்கும் 12 புத்ராஜெயா வழித்தடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த ஒரு கட்டணப் பரிமாற்றத் தளம் அமைக்கப்படுவதற்கு அம்பாங் பார்க் நிலையத்தின் நிலத்தடியில் திட்டமிடப்பட்டது; செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த ஒருங்கிணைப்பு திட்டம் கைவிடப்பட்டது.[8]
தற்போது, பயணிகள் ஒரு வழித்தடத்திலிருந்து வெளியேறி, தரை மட்டத்திற்குத் திரும்பி, இரண்டு வழித்தடங்களுக்கும் இடையில் மாறும்போது; மற்றொரு நிலத்தடி நிலையத்திற்குள் நுழைய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது; இரு நிலையங்களுக்கும் இடையில் 7 நிமிட நடைப்பயண நேரம் பிடிக்கிறது.
நிலைய அமைவு
[தொகு]| G | தெரு நிலை | அம்பாங் சாலை, துன் ரசாக் சாலை, அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையத்திற்கான நடைபாதை |
| B1 | இணைப்புவழி | நுழைவாயில்கள், கடைகள், கட்டண இயந்திரங்கள், தகவல் மையம், கட்டணக் கதவுகள், நடைமேடை 1; நடைமேடை 2-க்குச் செல்லும் படிக்கட்டுகள்/நகரும் படிக்கட்டுகள்/மின்தூக்கிகள் |
| B2 | இணைப்புவழி | படிக்கட்டுகள்/நகரும் படிக்கட்டுகள் (→) நடைமேடை 1; நடைமேடை 2 (→) எல்ஆர்டி. நிலையத்திற்கான நேரடி அணுகல் (திட்டத்தில்) |
| B4 | பிளவு நடைமேடை, தொடருந்து கதவு வலது புறம் திறக்கும் | |
| நடைமேடை 1 | 12 புத்ராஜெயா (→) PY41 புத்ராஜெயா சென்ட்ரல் PY21 (கேஎல்சிசி எம்ஆர்டி நிலையம்) (→) | |
| B5 | பிளவு மேடை, தொடருந்து கதவு இடது புறம் திறக்கும் | |
| நடைமேடை 2 | 12 புத்ராஜெயா (←) PY01 குவாசா டாமன்சாரா PY19 (ராஜா ஊடா எம்ஆர்டி நிலையம்) (←) | |
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
[தொகு]| புத்ராஜெயா — அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம் | ||
| A | துன் ரசாக் சாலை, வாடகை உந்துகள் / சவாரி-அழைப்பு நிறுத்தம்
கேஎல் டிரில்லியன், தோக்கியோ மெரைன் கோபுரம், விசுமா யுனிரசாக் |
|
| B | அம்பாங் சாலை, இன்டர்மார்க் மால், மெகான் அவெனியூ, பிளாசா ஓஎஸ்கே |
|
காட்சியகம்
[தொகு]அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (ஏப்ரல் 2023)
மேலும் காண்க
[தொகு]- மலேசிய தொடருந்து போக்குவரத்து
- குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
- துன் ரசாக் எக்ஸ்சேஞ்சு எம்ஆர்டி நிலையம்
- கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "This station is close to the US Embassy Malaysia, the Singapore High Commission, the Canadian High Commission, and the British High Commission". www.mrt.com.my. Retrieved 9 October 2025.
- ↑ "Klang Valley Integrated Transit Map" [Peta Transit Berintegrasi Lembah Klang] (PDF). MyRapid (in ஆங்கிலம்). Suruhanjaya Pengangkutan Awam Darat. 2021. Retrieved 20 February 2022.
- ↑ "Awarded Contracts for MRT Putrajaya Line" [Penganugerhan Kontrak untuk MRT Laluan Putrajaya]. mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
- ↑ Bernama (31 March 2016). "MRT Corp awards RM15.47b works package to MGKT" (in ஆங்கிலம்). Malaysia Kini. Retrieved 10 December 2022.
- ↑ "MRT Corp Awards RM 15.47 billion underground work contract to MMC Gamuda KVMRT (T) Sdn Bhd" (PDF) (in ஆங்கிலம்). MMC-Gamuda. 31 March 2016. Retrieved 10 December 2022.
- ↑ "Suncon bags RM661m new jobs". The Malaysia Reserve (in ஆங்கிலம்). 3 April 2017. Retrieved 29 November 2022.
- ↑ "Awarded Contracts for MRT Putrajaya Line". mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.
- ↑ Morden, Zarrah (2023-03-15). "Official: Titiwangsa MRT station could be next KL Sentral". Malay Mail (in ஆங்கிலம்). Retrieved 2024-01-07.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Ampang Park MRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Klang Valley Mass Rapid Transit website
- MRT Hawk-Eye View
