அம்பலப்புழா கிருஷ்ணர் கோயில்
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
அமைவு: | அம்பலப்புழா |
ஆள்கூறுகள்: | 9°23′01″N 76°22′10″E / 9.3836°N 76.3695°Eஆள்கூறுகள்: 9°23′01″N 76°22′10″E / 9.3836°N 76.3695°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | செம்பகாசேரி பூராடம் திருனாள்-தேவநாராயணன் தம்புரன் |
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் (Ambalappuzha Sri Krishna Temple) என்பது இந்தியாவின், கேரளத்தின், ஆலப்புழா மாவட்டத்தின், அம்பலப்புழாவில் உள்ள ஒரு இந்து கோவிலாகும்.
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலானது கி.பி 17 ஆம் நூற்றாண்டில் உள்ளூர் ஆட்சியாளரான செம்பகாசேரி பூராடம் திருனாள்-தேவநாராயணன் தம்புரனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அம்பலபுழாவில் கோயிலில் உள்ள கிருஷ்ணரின் சிலையானது விஷ்ணுவின் பார்த்தசார்தி வடிவத்தை ஒத்துள்ளது. வலது கையில் சவுக்கையும், இடது கையில் சங்கையும் வைத்திருப்பதாக உள்ளது. 1789 இல் திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது, குருவாயூர் கோயிலின் கிருஷ்ணர் சிலையானது கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் அம்பலப்புழா கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இக்கோயிலில் பிரசாதமாக அரிசி, பால் போன்றவற்றால் ஆன பால்பாயாசம், அளிக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் பிரசாதத்தை குருவாயூரப்பன் தினமும் வந்து ஏற்றுக்கொள்வதாக என்று நம்பப்படுகிறது.
விழாக்கள்[தொகு]
அம்பலப்புழா கோயில் திருவிழாவானது கி.பி பதினைந்தாம் நூற்றாண்டில் துவக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில், திருவிதாங்கூரின் ஒரு பகுதி செம்பகாசேரி தேவநாராயண வம்சத்தால் ஆளப்பட்டது. இந்த வம்சத்தின் ஆட்சியாளர்கள் மிகுந்த பக்தி மிக்கவர்களாக இருந்தனர். இவர்கள் கரிங்குளம் கோயிலில் இருந்து அம்பம்புலபுழ ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு கிருஷ்ணரின் சிலையை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தனர். கிருஷ்ணரின் இந்த சிலை கொண்டுவரப்பட்டதை நினைவுகூறும்வகையில் நடத்தப்படும், சம்பகுளம் மூலம் நீர் திருவிழா என்று குறிப்பிடப்படும் அமபாலபுழா கோயில் திருவிழா உருவானது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் மலையாள ஆண்டின் மிதுனம் மாதத்த மூல நாளில் நடத்தப்படுகிறது. ஆரட்டு திருவிழா மார்ச்-ஏப்ரல் மாதங்களில் திருவோணம் நாளில் நடைபெறுகிறது.