உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பலத்தற

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பலத்தற
வழியம்பலம்
நகரம்
அம்பலத்தற is located in கேரளம்
அம்பலத்தற
அம்பலத்தற
இந்தியா, கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°28′28″N 76°56′51″E / 8.47444°N 76.94750°E / 8.47444; 76.94750
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்திருவனந்தபுரம்
அரசு
 • வகைDemocracy
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
695026
தொலைபேசி குறியீடு0471
வாகனப் பதிவுKL-01

அம்பலத்தற (Ambalathara, Thiruvananthapuram) என்பது கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது பரவங்குன்னு, திருவல்லம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

திருவனந்தபுரத்தின் நகர மையத்தில் இருந்து அம்பலத்தற 5 கி.மீ. தொலைவில் உள்ளது. கிழக்குக் கோட்டையிலிருந்து கோவளம் வழித்தடத்தில் இயக்கப்படும் கேரள அரசு சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அம்பலத்தற வழியாகச் செல்கின்றன. அம்பலத்தறவிற்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 47 செல்கிறது. அம்பலத்தறவிலிருந்து மேற்கே கி.மீ. தொலைவில் உள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையமான திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையமான திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம், தோராயமாக 5 கி.மீ தொலைவில் உள்ளது. அம்பலத்தற என்பது திருவனந்தபுரத்தில் கிழக்கு கோட்டையிலிருந்து திருவல்லம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான குடியிருப்புப் பகுதியாகும். திருவல்லத்தில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான திருவல்லம் பரசுராமர் கோயில் அம்பலத்தறவிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற பழஞ்சிரா தேவி கோயில் இங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியில் உயர்குடியினர் வசிக்கும் பல குடியிருப்புகள் உள்ளன. 'குமாரிச்சந்தை' மீன் மற்றும் காய்கறி சந்தை, ஹர்த்தால் நாட்கள் உட்பட, ஒரு நாளில் 16 மணிநேரமும் திறந்திருக்கும். இது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

சமயம்

[தொகு]

அம்பலத்தறவில் வாழும் மக்கள் இந்து, இசுலாம், கிறிஸ்தவம் ஆகிய சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலத்தற&oldid=4528416" இலிருந்து மீள்விக்கப்பட்டது